அம்மணங்களை மறந்து ..அதன் உள்ளே/பின்னே இருக்கும் ஆழ் மணங்களை ரசியுங்கள்

 

அம்மணங்களை மறந்து ..அதன் உள்ளே/பின்னே இருக்கும் ஆழ் மணங்களை ரசியுங்கள்

 


  

பாம்பு உரிக்கும் சட்டையை போல இவ்வுடலை உரித்து தூக்கி கடாசிடத்தான் நினைக்கிறேன்...

அநேகமாக எல்லா பெண்களுக்கும் இது ஒரு ஆகப்பெரும் மன உளைச்சலை அல்லது ஒரு அவஸ்தையான சங்கடத்தை தருவதாகத்தான் இருக்கும்....

ஒரு ஆணின் அங்கங்கள் ரசிக்க படுவதை விட ..இன்ச் இன்ச் ஆக ரசிக்கபடும் பெண்களின் அவயங்கள்......மா பெரும் சாபம் ... இப்பெண்களுக்கு என்றால் அது மிகையில்லை..

எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் என்பது போல... எல்லோரும் தவறாமல் செய்வது பெண்ணின் அங்கங்களை. தவறாமல் மிக கூர்ந்து அளப்பதுதான்....

அவள் உடை அவள் அங்கம் அவளின் மரியாதையுடன் ஒப்பிட்டு பார்க்க படுவது காலம் காலமாக தொடர்கிறது....

தப்பி தவறி, ஈரத்தில் நனைந்த அவள் உடை... கவனகுறைவில்,

மூ.. மூ...மூட மறந்த, அல்லது காற்றில் பறந்துவிட்ட துணியின் சதியில்

இடுப்போ, வேறதுவும் பாகங்களோ கண்ணில் பட்டு விட்டால்....கவர்ச்சியின் ரசவாதம் ஆகி விடுகிறது...

கண்களில் தொடங்கி கால் விரல் நகம் வரை.....

ரசிப்பது என்பது வேறு, அது மனதையும் சார்ந்தது, சிந்தனையையும் சார்ந்தது, உடல் மட்ட்ட்ட்டுமே எப்பொழுதும் முதலில் நின்று ரசனையை ......மலுங்கடிக்க செய்கிறதோ என்னும் அச்சம்.....

பெண்களுக்கு எப்பொழுதும் இருக்கிறது...

காமத்தில் இருவருக்குமே, ரசனை உண்டு கிளர்ச்சி உண்டு, அதே உடல் தான், அதே அருகாமைதான், ஆயினும் தேவை படும் பொழுதுகளில் மட்டுமே ஈர்ப்பு தொடங்கி கலவிக்கு இட்டு செல்கிறது. அது தாண்டி இருபத்தி நான்கு மணி நேரமும் அவ்வுடல் கலவிக்கு மட்டுமே பயன்படுத்த படுமானால், அதை பற்றியே வர்ணனைகளிலேயே.... வைத்திருக்கபடுமானால் அது வரமா? சாபமா?

இப்பொழுது சரியாக நாற்பது வயது எனக்கு..... நான் என் உடல் புரிந்து உள்ளம் தெளிந்தது.....5, 6 வருடங்கள் முன்புதான். மார் பெருத்த பெண்கள் துப்பட்டா அணியாமல் சென்றால் முகம் நேராக சென்று திட்டுவேன்..

இப்பொழுதுதான் உணர்கிறேன்....

உள்ளாடை அணிந்து, அதன் மேல் இறுக்கமான சிம்மி அணிந்து, அதற்கு மேல் உடை அணிந்து. அதற்கு மேலும் துருத்தி கொண்டிருக்கும் உடலை மறைக்க துப்பட்டா அணிந்து ....

ஆனால் இன்று வரை என் உடலுக்கு தேவையான உடைகளை நான் தேர்ந்தெடுத்து வாங்கியதே இல்லை...போடும் ஆடைகளுக்கு ஏற்ப உள்ளாடைகள் கூட இருக்கிறது என்பதே இரண்டு மூன்று வருடங்கள் முன்புதான் தெரிந்து கொண்டேன். ஒரே வித உள்ளாடை எல்லாவற்றுக்கும் அணிந்தால்....நம் அறியாமை அங்கே ஆண்களை வலை வீசி பிடிக்கும் தந்திர செயலாக மாறி விடுகிறது.

இதிலும் கூட உள்ளும் புறமும் ஒத்து போக வேண்டும்..

இரண்டு வருடங்களாகதான் இரு சக்கர வண்டி ஓட்டுகிறேன். வண்டி ஓட்டும் பொழுது ஆகப்பெரும் சிரமம் ...கட்டி வைக்கும் துப்பட்டா எப்படி தானாக அவிழ்ந்து, தடாலென்று பறக்கும் என்றே தெரியாது....

வண்டியை கவனமாக ஓட்டுவதா? துப்பட்டாவை சரி செய்வதா?

எதிர் வரும் ஆண் மகன்களின் காம பார்வையை சகிப்பதா?

கண்ணில் படும் பெண்களே....நம்மை பார்த்து அருவருத்து முகம் சுழிப்பதை பொருப்பதா? (நானே அப்படி செய்தவள் தானே)

மார்புகளை அறுத்தெரிய முடியும் என்றால்....அதற்கொரு வழி முறை உள்ளதென்றால்.... நான் மட்டுமல்ல...என்னை போல பல பெண்கள்...கட்டாயம் அதை செய்து விடுவார்கள்....(முடியலடா சாமி ).

சில வருடங்கள் முன்பு (செல்ஃபோன்கள் இல்லாத காலம்) பத்திரிக்கை ஒன்றில் பேருந்தில் அம்மாவும் பெண்ணுமாக சென்று கொண்டு இருந்த பொழுது அம்மாவின் கன் முன்னரே பெண் பேருந்தில் இருந்து கீழே விழுந்து விட, விழுந்த பெண்ணை தூக்க எவரும் வராதது மட்டுமின்றி விழுந்ததில் கிழிந்த அப்பெண்ணின் உள்ளாடையை அங்கிருந்த அனைவருமே ரசித்து பார்த்து கொண்டு இருந்ததை அம்மா, பெண் இருவராலும் தாங்க முடியாமல் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக...அந்த செய்தி .....இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் மனதை விட்டு மறக்கவே மறக்காத செய்தியாகி மனதில் வடுவாகி போனது.

 Face book  .whatsup Profile வைக்கும் படங்களில் கூட தெரியாமல் உடல் துருத்தி கொண்டு இருந்தால் முடிந்தது....அவளின் மரியாதை......

அவளுக்கான நேர் வழி பாராட்டாக கமென்ட்களில் ஒரு மாதிரியாகவும் அவர்களின் மைண்ட் வாய்ஸ்கள் பின் பக்க சுவர் ஏறி குதித்து இன்பாக்ஸ் இல் வேறு வக்கிர தன்மையில், 'எப்படி மேடம் இத்தனை ஆண்களை சமாளிக்கிறீர்கள்' !!!! என்பதாகவும் ....அட புண்ணாக்கு முட்டைகளே....

யார் அய்யா நீங்கள் எல்லாம்?????

ஆனால்.....

இக்கால பெண்கள்... ஆஹா... ஆஹா..கட்டி அணைத்து, வாழ்த்த வேண்டும் அவர்களை...எவ்வளவு இயல்பாக....உடை உடுத்தி, போங்கடா நொன்னைங்களா என்று வெகு இயல்பாக உடல் தாண்டி, ஆண்களிடம் எவற்றை பற்றியும் சகஜமாக பேசி, "உன் டீ ஷர்ட் தாடா நாளைக்கு நான் போட்டுட்டு தர்றேன்" என்று பட்டம் போல பறக்கிறார்கள்..

(இன்னும் 30 சதவிகித பெண்கள் மட்டுமே உடல் பயம் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்)

இவ்வளவு வருடங்கள் தாண்டி இப்பொழுதுதான் ஆண்களிடம் இயல்பாக பேசவே தொடங்கி இருக்கிறேன்...கின்றோம்....நிறைய பெண்கள்....எனவே...

அம்மணங்கள் எல்லோருக்கும் பொது சுவர்..அதன் உள்ளே/பின்னே இருக்கும் ஆழ் மணங்களை இனி ரசிக்க பாருங்கள்,

தொடங்குங்கள்

 

.....எங்களுக்கு நிறைய ஆண் நட்புகள் வேண்டும்

 

... கள்ளமின்றி உரையாட, கழுத்துக்கு கீழ் பார்த்து பேசாமல், சிரித்துகொண்டே கண் பார்த்து பேச, சேர்ந்து டீ சாப்பிட...

சேர்ந்து ஊர் சுற்ற....

நம் பிள்ளைகள் நம் நட்பை பார்த்து உடல் ஈர்ப்பு தேவை இல்லை என்று கற்று உணர, தோள் கொடுங்கள் எனக்கு../எங்களுக்கு.

செய்வீர்களா...நீங்கள்..செய்வீர்களா.

(JJ mother voice இல் படித்து கொள்ளவும்)

பழகி பாருங்கள்..

.பெண்களிடம்...உடல் மறந்து...உள்ளன்புடன் ...தயை கூர்ந்து

............................................அனு பரமி


 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி