உதவியை மறக்காத சூர்யா... விருமன் விஷயத்திலும் தொடரும் அமேசான் பாசம்.
உதவியை மறக்காத சூர்யா... விருமன் விஷயத்திலும் தொடரும் அமேசான் பாசம்.
கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்ப்போடு எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் விருமன் படத்தின் தற்போதைய அப்டேட் ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுத்துள்ளதாம்.
விருமன் திரைப்படம் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனத்தின் சார்பில்.. குட்டிப்புலி,கொம்பன் படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரவிருக்கும் திரைப்படம் "விருமன்" கோடை விடுமுறை வெளியீடாக வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் கைப்பற்றியுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவுகிறது.இதுவரை தான் நடித்த படங்கள் அனைத்துமே வெவ்வேறு இயக்குனர்களுக்கு வழங்கிவந்த கார்த்தி, முதன்முறையாக தனது கொம்பன் பட இயக்குனர் முத்தையா விற்கு இரண்டாவது முறையாக விருமன் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். எவ்வளவோ நல்ல இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தாலும், கொஞ்சம் சர்ச்சை இயக்குனராக பார்க்கப்படும் முத்தையா விற்கு கார்த்தி இரண்டாவது வாய்ப்பு வழங்கியது அனைவருக்கும் சற்று வியப்பாகவே இருந்தது.பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி தமிழ் சினிமாவில் முதல் முறையாக கதாநாயகியாக இப்படத்தில்தான் அறிமுகமாகிறார்.யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்
படம் நன்றாக இருக்கிறதோ..!! இல்லையோ..!? போட்ட காசை எடுத்து விடலாம் என்ற மினிமம் கேரண்டி முத்தையா படங்களுக்கு இருப்பதால், இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்து வருகிறது. மிக விரைவாக படத்தை எடுத்து முடிக்கும் பழக்கம் கொண்ட இயக்குனர் முத்தையா இந்த படத்தையும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக வேகமாகவும் எடுத்து வந்து கொண்டிருக்கிறார். கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
Comments