‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்

 



இளையராஜா இசையமைத்த ‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்’ (வள்ளி), ‘காற்றில் எந்தன் கீதம்’ (ஜானி) போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இதயத்தை யாரோ பறித்தெடுத்துச் செல்வது போன்ற உணர்வுநிலைக்குத் தள்ளப்படுவேன்

. இந்த இரண்டு பாடல்களும் கீரவாணி ராகத்தால் மிக நுண்மையாக படைத்தப்பாடல்கள்

 இந்த ராகம் பறவைகளுக்குப் பிடித்தமான ராகம் என்று சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன என கேள்விப்பட்டிருக்கிறேன்

நம்  பயணத்தின்போது ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல், ஒரு மரத்தில் பறவைகள் பறந்து எழுந்து மீண்டும் அமர்வது போன்ற உணர்வை  தரும்


. பாடலுடன் பாடலின் நிரவல் இசைக்கோவையும் ஒன்றிணைந்து ஒரு காட்சிப் படிமமாகி, கவித்துவமான நுண் ஒலியால் நிரம்பியதே இளையராஜாவின் தனித்துவமான உலகம். 

வள்ளி திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகளுக்கு இசை அமைத்தவர்  இளையராஜா. பாடியவர் ஸ்வர்ணலதா, இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் ஏனோ என் நினைவுகள் மறைந்து போன பாடகி ஸ்வர்ணலதாவையே சுற்றி வருகின்றது!


                                                                                இளையராஜாவின் கிட்டார் இசை, நரம்புகளுக்குள் ஏதோ செய்கின்றது, விபரிக்கமுடியாத ஏதோ உள்ளு ணர்வு வருடுவதுபோல ஒர் இசைத்தவிப்பு பாடலை நீங்களும் கேளுங்கள் அதை ஒத்துக்கொள்வீர்கள்! 


கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்  வாலியின்வரிகள் மிக அழகானவை 


பொதுவாக நான் திரைப்பாடல்களின் காட்சிகளை பார்ப்பதைவிட கேட்பதில்தான் ஆர்வம்

 என் மனம் கவர் பாடல்களாய் இருப்பின் அதன் திரைக் காட்சிப்பாடுகளைக் காண்பதை தவிர்ப்பேன்


பல நிகழ்வுகளில்  நம் மனம் கவர்ந்த பாடல்கள் நம் கற்பனையில் சில காட்சிகளை காண்பிக்கும


அது விவரிக்க முடியாத ஒரு மன நிலை


’என்னுள்ளே என்னுள்ளே...’ பாடலின் இசை நிச்சயமாக ஆன்மிகத் தன்மை கொண்டது போல தோன்றுகிறது

 இசைஞானியின் பல பாடல்கள் அப்படித்தான். திரைக் கதையின்படி இது காம நிகழ்வொன்றில் இடம் பெறுவதாய் இருக்கிறது

 சங்க இலக்கியத்தில் ஓர் அருமையான பாடல் இருக்கிறது “யாரும் இல்லை தானே கள்வன்” என்று. அச்செய்யுளின் அடிகளை ஆழ்ந்து நோக்கினால்

 அதில் ஒரு பெண்ணின் அக ஆழத்தில் கேவித் தவிக்கும் ஆன்மாவின் குரலினைக் கேட்கலாம். இப்பாடலின் இசை அந்தச் சங்கப் பாடலுக்கு இசைஞானி இயற்றியிருக்கும் பொழிப்புரை என்று கருதலாம்

வாலி எழுதியிருக்கும் வரிகளிலும்கூட சிற்றின்பமானது பேரின்ப மொழியில்தான் பேசுகிறது. ‘காலம் என்னும் தேரே ஓடிடாமல் நில்லு’ என்னும் ஒரு வரி போதுமானது. வரியாகப் பார்க்கும்போது அது காலத்திற்கு இடும் ஆணை போல் தொனிக்கும்

 இசைஞானியின் மெட்டு அதனை ஓர் பிரார்த்தனை போல் நமக்கு சொல்லாமல் சொல்லும்

இங்கே ஸ்வர்ணலதாவின் குரல் மிகச் சரியான தேர்வு. அப்பாடகிக்கு அவர் அளித்த இசை தீட்சை இந்தப்பாடல்


 இந்தப்பாடலின் திரைக்காட்சி சரியாக கையாளவில்லை நமக்கு ஏமாற்றத்தைத்தான் தருகிறது


பாடல் காட்சி பாருங்க



உங்க கற்பனையில் நீங்களே படைத்த காட்சிகளை படக்காட்சியுடன் ஒப்பிட்டுககொள்ளுங்க


இசைஞானியின் பல பாடல்கள் இப்படிதான்


 அப்பாடலில் தொனிக்கும் ஆன்மிக உணர்வை சிலரே உணர்ந்துள்ளனர்

இந்தப்பாடலில் மேற்கத்திய இசை வடிவமான சிம்ஃபொனியின் கூறுகள் எப்படிக் கையாளப் பட்டுள்ளன என்பதை அறிய நமக்கு போதிய  மேதாவித்தானம் எனக்கு  இல்லை ‘


இளையராஜாவுடன் பணியாற்றிய அனைத்துப் பாடல்களிலும் தனக்கென ஒரு தனித்தன்மையைப் பிரதிபலிக்க ஸ்வர்ணலதா  ஒரு போதும் தவறியதில்லை. இளையராஜா இசையில் இவர் பாடிய ``மாலையில் யாரோ” தான் அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்றளவும் அப்பாடலில் உருகும் தேனென அவரின் குரல் அத்தனை மென்மையாய் ஒலித்துக்கொண்டேதான் 

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! 


 முகம் காணாத நேசம் என்பார்களே அதைப் போன்றதோர் உணர்வை எட்டியிருந்த காலத்தில் அவரின் பல பாடல்கள் முணுமுணுப்பைத் தாண்டி ரசனையின் அடுத்தகட்டத்துக்கென என்னை அழைத்துச் சென்றிருந்தது. 

அக்கால கட்டத்தில் அவர் பாடிய பல பாடல்களைக்க  கேட்ட இரண்டொரு நொடிகளில் இது ஸ்வர்ணலதாவின் குரலென அடையாளம் காண முடிந்திருந்தது 

அவரின் தாய் மொழி தமிழில்லை என்று தெரிய வாய்ப்பே இல்லை. உச்சரிப்புக்கெனத் தனி அகராதி ஏதும் உண்டெனில் அதில் ஸ்வர்ணலதாவுக்கும் ஓர் இடமிருக்கும். அப்படியொரு தெளிவான உச்சரிப்பை இந்த இன்னிசைக் குயிலுக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்று யோசித்ததுண்டு. 

உச்சரிப்பை எத்தனை முறை ரசித்தாலும் தகும்.  `கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வந்த ``ஆட்டமா தேரோட்டமா” பாடல்தான் ஸ்வரண்லதாவுக்குக் கிடைத்த முற்றிலும் மாறுபட்ட பாடல். அதற்கு முன் பாடிய எல்லாப் பாடல்களும் மெலடி வகையறாக்கள். ஆனால் இப்பாடல் அவரின் குரலின் மாறுபட்ட பரிமாணம். பாடல் முழுவதும் அவர் குரலின் வழி பரவும் குதூகலம் நம்மையும் ஒட்டிக் கொள்ளும். 



என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 

எதுவோ மோகம்..................


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 


கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் 

ஆனாலும் அனல் பாயும் 

நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் 

ஆனாலும் என்ன தாகம் 

மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன 

தூபம் போடும் நேரம் தூண்டிலிடதென்ன 

என்னையே கேட்டு ஏங்கினேன் நான்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 


கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது 

ஒன்றி ஒன்றாய் கலந்தாட 

ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் 

ஆழ்நிலையில் அறங்கேற

காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு 

இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு 

காண்பவை யாவும் சொர்க்கமே தான்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 

எதுவோ மோகம்..................


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்

இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் பாடியிருந்தாலும் ``என்னுள்ளே என்னுள்ளே”பாடல் இன்றளவும் அவருக்கு ஒரு சிகரம்தான்  மோகத்துக்கென ஒரு வடிவமிருக்குமெனில் அது ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்கும். ``மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன” என்று அவர் உச்சஸ்தாயில் பாடும் அக்குரலைக் கேட்கையில் கால்கள் இரண்டும் தரையில் இல்லாது மிதந்துகொண்டிருக்கும். இப்போதிருக்கும் தலைமுறைப் பாடகர்கள் கூட அப்பாடலை வெவ்வேறு விதமாக பாட முயற்சி செய்தாலும் ஸ்வர்ணலதாவின் குரலில் வெளிப்படும் மோகத்தின் சிறு அளவைக் கூட யாராலும் நெருங்க முடியவதில்லை என்பது நிஜம்


-உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,