உசிரு வலி /#ஸ்ரீநி




பொசசீவ் இருக்குனு நல்லா தெரியும்.
ஆனா பொசசீவ் உண்/டாகற மாதிரி தான் எல்லா விஷயமும் செய்ய வேண்டியது.
இதெல்லாம் பண்ணா அங்க வலிக்குமே,
இதெல்லாம் பேசினா அங்க துடிச்சு போகுமே,
இதெல்லாம் போட்டா அங்க மனசு வருந்துமே னு எந்த உணர்வும் இல்லாம இஷ்டத்திற்கு நடந்துக்க வேண்டியது.
அப்புறம் கத்தினா கோச்சுக்கிட்டான் முறைச்சிக்கிட்டா னு பிளேட் திருப்ப வேண்டியது.
காதல் ஒருவர் சம்மந்தப்பட்டது இல்ல,
அது ரெண்டு பேர் சம்மந்தப்பட்ட விஷயம் னு எப்பதான் மரமண்டைகளுக்கு புரிய போகுதே தெரியல.
தான் இஷ்டத்திற்கு செய்யறதுக்கு என்ன சவரி முடிக்கு காதல் செய்யனும் னு தெரியல.
இங்க ஒண்ணு செஞ்சா அங்க சந்தோஷப்படும்.
இங்க ஒண்ணு பண்ணா அங்க பாதிக்கும் னு அடிப்படை அறிவு கூட தெரியாம காதலை தொபக்கடீர் னு விழுந்து எதை கைட்ட இதெல்லாம் பண்ணுதுங்க தெரியல..
நிஜமா தெரியலையா,
இல்ல வேணும்னே கடுப்பேத்தி உஷ்ணத்தை அதிகரிச்சு எண்ணெய் சட்டியில் நிக்கற மாதிரியே பண்ணனும்னு பண்ணறாங்களா தெரியல.
ஒரு மாதிரியான மனநிலை இருக்கு தெரியுமா அப்ப அந்த சமயத்துல.
பைத்தியத்தின் முதலாம் ஆண்டு கல்லூரி கால அறிகுறி போல இருக்கு.
இதெல்லாம் பேசி புரியவைச்சு அட போடா னு நிலைக்கு வந்தாச்சு.
ஆனா இன்னும் அதே போல் தான் போயிட்டு இருக்குன்னா சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.
மேலோட்டமாக பார்த்தா இதெல்லாம் பெரிய விஷயமா தெரியவே தெரியாது.
ஆனா ஆழ்ந்து உள்ள வந்து நல்லா அந்த ரெண்டு முட்டை கண்ணை தொறந்து பார்த்தா இதெல்லாம் உசிரு வலி னு தெரிஞ்சு தொலையும்.
நாம தான் கண்ணை நம்ம பக்கம் கொண்டு வர்றதுக்கே அவ்வளவு யோசிக்கறோமே..
அப்புறம் எப்படி மனசை கொண்டு வந்து பார்க்கிறதுக்கு..
அட போங்கடா!

Comments

sumathi chintha said…
வழக்கம் போலவே அற்புதமான பதிவு ஸ்ரீ... வாழ்த்துக்கள் 💐
sumathi chintha said…
வழக்கம் போலவே அற்புதமான பதிவு ஸ்ரீ வாழ்த்துக்கள் 💐💐💐

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி