கொரோனா மூன்றாம் அலையான ஒமைக்ரான் பரவலின்போது ஏற்படக்கூடிய பொதுவான ஐந்து அறிகுறிகள்
கொரோனா மூன்றாம் அலையான ஒமைக்ரான் பரவலின்போது ஏற்படக்கூடிய பொதுவான ஐந்து அறிகுறிகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
உடல் நடுக்கம் அல்லது நடுக்கமற்ற காய்ச்சல், இருமல், தொண்டையில் எரிச்சல், தசை பலவீனம் மற்றும் சோர்வு ஆகிய 5 பொதுவான அறிகுறிகள் கொரோனா மூன்றாம் அலையில் காணப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் 5 நாட்களுக்குப்பிறகு படிப்படியாக குறைந்துவிடும்.
அதேபோல், 11 முதல் 18 வயதினருக்கு காய்ச்சலுடன் மேல் சுவாசப்பாதையில் தொற்று ஏற்படுவதாகவும், ஆனால் இந்தமுறை நிமோனியா பாதிப்பு குறைவாக உள்ளது.
Comments