தைப்பூசம். தமிழர்களுக்கே உரித்தான ஒரு விழா.

 தைப்பூசம்..
விழாக்களும், வழிபாடுகளும், குதூகலக் கொண்டாட்டமும் தமிழர்களின் வாழ்வியல் பாரம்பரியம்.


தைப்பூசம்.

தமிழர்களுக்கே உரித்தான ஒரு விழா.


தை மாதத்தில் பௌர்ணமியும் பூசநட்சத்திரமும் இணைந்து வரும் நாள்தான் தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாள்..

சிவனுக்கும், முருகனுக்கும் விசேசமான ஒரு நாள்.


அப்பரும், ஞானசம்பந்தரும் தைப்பூசத்திருநாளை வெகு சிறப்பாகத் தங்கள் பதிகங்களில் பாடியுள்ளனர்.


கல்வெட்டுகளிலும் தைப்பூசத்திருநாள் இடம்பெற்றுள்ளது.


திருவிடைமருதூர்.

ஆதித்தகரிகாலனின் 

4 ஆம் ஆட்சியாண்டு.

கி.பி.970.

( s.i.i. vol 3 no 202)

தைப்பூசத்திருநாளும் அதை தொடர்ந்து வரும் மூன்று நாளும் கூத்துகள் நடத்துவதற்கான நில தானம் வழங்கப்பட்டுள்ளது.


சிவனுக்கு உகந்த நாளாக இருந்தாலும்..


முருகனுக்கு ஒரு சிறப்பான நாளாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.


தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களும் விழாக்கோலம் காணும்.


பக்தர்களின் பாதயாத்திரை. பால்காவடி. ஆட்டம். பாட்டம். சிறப்பு வழிபாடு என்று களை கட்டும்.


தமிழகம்.இலங்கை..

மலேசியா.. சிங்கப்பூர் என்று தமிழர்கள் இருக்கும் எப்பகுதியிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.


தமிழ் கடவுளுக்கு தித்திப்பானத் திருநாள் ஆயிற்றே...


அது ஏன் முருகனை மட்டும் தமிழ்க் கடவுள் என்கிறோம்.?


முருகு வழிபாடு பாரதம் முழுக்கப் பரவியிருந்தாலும்..

முருகு வழிபாட்டின் அடித்தளம் தமிழ்நாட்டில்தான் உள்ளது.


சிலப்பதிகாரம் கூறும் வேற்கோட்டம். 

வேல் மட்டும் கருவரையில் இடம்பெறும் ஓர் கோவில்.  தொல்லியல் சான்றாக சாளுவன் குப்பம் முருகன் கோவில். 

சங்க கால வேல்.

சங்ககாலக் கோவில்.


முருகனின் அறுபடைவீடுகளும் தமிழகத்தில் மட்டும் உள்ளது. 


சங்க இலக்கியம் கூறும் கடம்பமாலை அணிந்து யானை மேல் வரும் முருகனின் சிற்பம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

அம்மையப்பருடன் இளமுருகுவாக உடனுறை வடிவம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.


அன்னையிடம் பெற்ற சக்தி ஆயுதம், இந்திரனிடம் பெற்ற வஜ்ராயுதம்.. இவ்விரண்டையும் ஏந்திய முருகன் வடிவம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.


பிரம்மனுக்கு பிரணவத்தைப் போதித்து பிரம்மனுடைய ஜபமாலையுடன் காட்சி தரும் பிரம்மசாஸ்தாவாக தர்ம சாஸ்தாவாக  முருகன் காட்சி தருவது தமிழகத்தில் மட்டுமே உள்ளது.


இன்னும் ஏராளமான முருகனின் பிரத்யோக வடிவங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

முருகனது வழிபாட்டு முறையும் தமிழகத்தில் இருப்பது போல் மற்ற இடங்களில் இல்லை.


தமிழ்க் கடவுள் முருகன் என்று கூறுவதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.


அனைவருக்கும் தைப்பூசத்திருநாள் வாழ்த்துகள்..

---வி,ரவிச்சந்திரன்-

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,