சரவணா ஸ்டோர் ஜப்தி
சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வருகிறது பிரைம் சரவணா ஸ்டோர். அந்நிறுவனம் இந்தியன் வங்கியில் வாங்கிய 400 கோடி நிலுவைத் தொகையைச் திரும்ப செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ், ரங்கநாதன் தெருவிலுள்ள கடை மற்றும் உஸ்மான் சாலையிலுள்ள நகைக்கடை கட்டடம் உள்ளிட்டவை ஜப்தி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக இந்தியன் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளன
Comments