நடிகை சரோஜாதேவி

 நடிகை சரோஜாதேவி பிறந்தநாள் இன்று


தமிழ் திரையுலகில் உலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி அவர்கள். மக்கள் திலகம் எம். ஜி. ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.
ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
பெங்களூரைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி ஜாவர் பைரப்பா–ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாக ராதாதேவி என்ற இயற்பெயருடன் பிறந்தாா். இவருக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி, என்ற மூன்று அக்காவும் வசந்தாதேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனா்.
இவா் ராதாதேவி என்ற பெயரை திரை உலகிற்காக சரோஜாதேவி என்று பெயரை மாற்றி கொண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் (1958).
இதன்பின் ஸ்ரீதரின் 'கல்யாணப் பரிசு' 1959 படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,