மாட்டுப்பொங்கல் கனுப்பிடி வைத்தல்

 மாட்டுப்பொங்கல் அதிகாலையில் கனுப்பிடி வைத்தல் என்பது சிறப்பான ஒன்று.







வயதில் மூத்தோர்(பெண்கள்)களிடம் மஞ்சள் கீறி நமஸ்காரம் செய்து ஆசிப்பெற்றுக்கொண்டு (நிறைய வாழ்த்தி சொல்வார்கள்...தற்போது சுருங்கிப்போய் சீரோடும் சிறப்போடும்..சின்ன ஆம்படையானுக்கு வாக்கப்பட்டு..பெரிய ஆம்படையானுக்கு வாழ்க்கைப்படணும் !)
*இதற்கான விளக்கம் : சின்ன ஆம்படையான் கர்மாதீனமாக நமக்கு வாய்க்கப்பட்ட கணவருடன் சிறப்பாக இல்லறம் கண்டு பின் வைகுண்டத்தில் இறைவனை ஏகுதல் என்பதே சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்க்கைப்படணும் என்பதற்கு பொருள் : பூலோகத்தில் புருஷோத்தமனான ஸ்ரீ பரந்தாமனுக்கு முன் அனைவரும் பெண்களே அவரை அடைவதே நம் லட்சியமாக இருத்தல் வேண்டும்..!
பிறகு முந்தைய நாளே ரெடி செய்த பொங்கல்..கலர் சாதங்கள்,கரும்புடன்
சூரிய உதயத்திற்கு முன் கனுவைத்து.. காக்காய்க்கூட்டத்தைப்போல நாங்களும் கூட்டுக்குடும்பமாக இருக்கணும் என பிரார்த்திக்கொண்டு..காக்காய்க்கு ஒரு பிடி கனுக்கு ஒரு பிடி உனக்கு பிடி எனக்கு பிடி.. காக்காய்க்கு கனுப்பிடிவைத்தேன்! என்குடும்பம் கூட்டாக சிறப்பாக இருக்கவேண்டும் ;!
என வேண்டிக்கொண்டு...
தேங்காய் வெத்தலை பாக்கு பழமென நைவேத்தியம் செய்து,
காக்காய்க்கு அர்ப்பணித்தல் அற்புதமான இந்த கனுப்பிடி சம்பிரதாயம்
பிறகு ஆரத்தி எடுத்து நமஸ்கரித்து, உடனே குளித்து
கலவை சாதங்கள் தயார் செய்து நைவேத்தியம் செய்வது மரபு.
கூடப்பிறந்தோர் நன்றாக வாழ வேண்டும்.
பிறந்த வீடும் புகுந்த வீடும் சிறப்பாக இருக்கவேண்டுமென பெண்கள் அனுசரிக்கும் சம்பிரதாயம் இது !
பள்ளி இருக்கும் சமயத்தில் மகளை எழுப்பி வைக்க சொல்வதற்குள் குளிர் நடுக்கிவிடும்.தற்போது பள்ளி விடுமுறை என்பதால் குளிரின்றி..வைத்தாயிற்று.
இங்கு என்னை சகோதரியாக ஏற்றுக்கொண்டவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,