டோலோ இல்லாமல் நான் இல்லை

 

டோலோ 650 அசுர விற்பனை: கரோனா காலத்தில் இந்தியர்களுக்கு உணவு போல மாறும் மருந்து

டோலோ 650, கரோனா கோர தாண்டவமாடிய மார்ச் 2020 முதல் ரூ. 567 கோடி விற்பனையாகி, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா கோவிட் மூன்றாவது அலையுடன் போராடி வரும் இந்த தருணத்தில் டோலோ 65 மக்களுக்கு உணவுபோல ஆகும் நிலைக்கு வந்து விட்டது.

#Dolo650 கடந்த வாரம் முழுவதும் சமூக ஊடகங்களில் டிரெண்டான வார்த்தையாகியுள்ளது. ஜனவரி 2020 முதல் பாராசிட்டமால் விற்பனைத் தரவைக் கவனித்தால், டோலோ 650 தவிர, கால்பால் சுமோ எல் உள்ளிட்ட 37 பிராண்டுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகம் விற்பனையாகியுள்ளன.

சுகாதார ஆய்வு நிறுவன தரவுகளின்படி டோலோ மற்றும் கால்பால் ஆகியவை காய்ச்சலுக்காக சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பாராசிட்டமால் மருந்து கொண்ட முக்கிய பிராண்டுகள் ஆகும். இந்த பிராண்டுகள் ஒவ்வொன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்களால் பரவலாக பரிந்துரைக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி இது மக்கள் மனதிலும் சாதாரண காய்ச்சல் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்கான மருந்தாகி விட்டது.

2021 டிசம்பரில் டோலோ 650 ரூ.28.9 கோடி விற்பனையாகியுள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 61.45 சதவீதம் அதிகமாகும். இருப்பினும் கோவிட் இரண்டாவது அலையின் உச்சத்தில் இருந்த காலத்தில் அதன் அதிகபட்ச விற்பனை இருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2021-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.48.9 கோடி மற்றும் ரூ.44.2 கோடி விற்பனையாகியுள்ளது.

2021 டிசம்பரில் அதிகம் விற்பனையான இரண்டாவது பாராசிட்டமால் பிராண்டான கால்பால் விற்பனை 28 கோடி ரூபாயாக இருந்தது. இது 2020 டிசம்பரில் இருந்து 56 சதவீதம் அதிகமாகும். இரண்டாவது அலையின் உச்சத்தில், கால்பால் ரூ.71.6 கோடியுடன் அதிக விற்பனையான பாராசிட்டமால் ஆகும். ஃபெபனில், பி-250, பாசிமால் மற்றும் குரோசின் ஆகியவை பாராசிட்டமாலின் பிற பிரபலமான பிராண்டுகள் ஆகும்.

ஏன் டோலோ 650?

டோலோ 650 இன் வெற்றிக்கு ஒரு காரணம், குரோசின் போலல்லாமல், இன்னும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தாக இருப்பதுதான் என்று மருத்துவர்கள் மற்றும் மருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இது அனைத்து வயதினருக்கும் கொடுக்கப்படலாம் என்பதாலும் குறைந்த பக்க விளைவுகள் மட்டுமே உள்ளதாவும் டாக்டர்கள் டோலோ 650 ஐ பரிந்துரைக்கின்றனர். இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களுக்கான மருத்துவரும், மருத்துவமனை இயக்குனருமான ரித்தேஷ் குப்தா கூறியதாவது:

“டோலோ 650 என்பது பாராசிட்டமாலின் பிராண்டுகளில் ஒன்றாகும், இது காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான நேரத்தை பரிசோதிக்கும் மற்றும் பொதுவான மருந்தாகும். இது குரோசின், கால்பால், பாசிமோல் போன்ற பிற பிராண்டுகளிலிருந்து வேறுபட்டதல்ல. இது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான மருந்து மற்றும் அனைத்து வயதினரும் மற்றும் இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் எடுத்துக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

.காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல்வலி ஆகியவை மூன்றாவது அலையில் கோவிட் நோயின் முக்கிய அறிகுறிகள். அறிகுறிகள் லேசானவை பொதுவாக நான்கு அல்லது ஐந்து நாட்களில் சரியாகிவிடும். அதுபோன்ற சூழலில் இந்த வகை பாராசிட்டமால் மருந்துகள் உதவுகின்றன.

மகாராஷ்டிரா மாநில மருந்து விற்பனையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான அனில் நவந்தர் கூறுகையில் ‘‘டோலோ 650 ஒரு பிராண்டாக மாறியுள்ளது. அதன் பெயர் பாராசிட்டமாலுடன் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. பிஸ்லரி அல்லது ஜெராக்ஸ் போன்ற பிராண்டுகள் அந்தந்த பொருட்களாகி போனது போலவே டோலோ 650 யும் மாறி விட்டது.

லேசான காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டால் பாராசிட்டமால் சாப்பிடும் போக்கு உள்ளது. பிஸ்லரி ஒரு பெரிய பிராண்டாக மாறிய விதத்தில், டோலோ 650 ஒரு பிராண்டாக மாறியுள்ளது. சொல்லப்போனால் இது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது” என்றார்

டோலோ 650 தயாரிப்பது யார்?

டோலோ 650 ஆனது மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்டது, இது பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் 1973 இல் இது மருந்து விநியோகஸ்தர், ஜி.சி. சூரனா என்பவரால் நிறுவப்பட்டது, இந்நிறுவனத்தை தற்போது அவரது மகனும் நிர்வாக இயக்குநருமான திலீப் சுரானா நடத்தி வருகிறார்.

இதயவியல், நீரிழிவு நோய், கண் மருத்துவம் மற்றும் தோல் மருத்துவம் ஆகியவை அதன் நிபுணத்துவத்தின் முக்கிய பகுதிகளாகும். டோலோ 650 தவிர, உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஆம்லாங் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்தான டெனெப்ரைடு போன்ற பிராண்டுகளையும் நிறுவனம் விற்பனை செய்கிறது.

நிறுவனத்தின் இணையதள தகவல்படி அதன் ஆண்டு வருவாய் ரூ.2,700 கோடியாகும், இதில் ரூ.920 கோடி ஏற்றுமதியும் அடங்கும்.

நன்றி

https://www.hindutamil.in/



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,