பித்துக்குளி முருகதாஸ்.

 பித்துக்குளி முருகதாஸ்.




💐
🏆 பக்தி பாடல்கள் பாடுவதில் தனக்கென்ற தனி முத்திரையை பதித்த பித்துக்குளி முருகதாஸ் 1920ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கோவையில் பிறந்தார். இவரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியன்.
🏆 பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். பின்னாளில், இவருக்கு உபதேசம் அளித்து, முருகதாஸ் என்ற பெயரை சூட்டினார் சுவாமி ராமதாஸ். பிரம்மானந்த பரதேசியார் தனக்கு வைத்த பித்துக்குளி என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டு, பித்துக்குளி முருகதாஸ் ஆனார்.
🏆 1947ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கிய பித்துக்குளி முருகதாஸ், 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்து பாடியிருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், நேபாளம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார்.
🏆 கலைமாமணி, சங்கீத சாம்ராட், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த பாடகரும், முருக பக்தருமான இவர் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்