பழம்பெரும் நடிகை ரத்னா

 பழம்பெரும் நடிகை ரத்னா காலமானார். அவருக்கு வயது 75.


எம்ஜிஆர் நடித்து 1964-ம் ஆண்டு வெளியான ’தொழிலாளி’ படத்தில் அறிமுகமானவர் ரத்னா. இதையடுத்து எம்ஜிஆரின் ’எங்க வீட்டுப்பிள்ளை’ படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்ற பாடல் காட்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து 'நாம் மூவர்', 'சபாஷ் தம்பி', ’இதயக்கனி’ உட்பட பல படங்களில் நடித்தார் ரத்னா. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னை பாலவாக்கத்தில் வசித்துவந்த ரத்னா உடல்நலக்குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம் தேதி காலமானார். அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இதையடுத்து திரையுலகினர் அவர் மறைவுக்கு சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நன்றி: இந்து காமதேனு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,