முனைவர் தமிழ் மணவாளனுக்கு தமிழ் செம்மல் விருது

 செம்மல் உள்ளமொடு செல்வீராயின

************************************************************


*
விருது ,பரிசு ,பாராட்டு, கைத்தட்டல் ,அங்கிகாரம் என்பது ஒரு படைப்பாளிக்கு வாழும் காலத்திலேயே வழங்கப்படல் வேண்டும். அது தான் அவனின் இருப்புக்கான பெருமிதம். கூடவே அப்படி வழங்கப்படும்போது அது குறித்து ஆதரித்தோ எதிர்வினை செய்தோ கருத்து வருவது ஜனநாயக மாண்பு தான். தப்பில்லை, ஆனால் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகி்றோம்.
அதில் விஷ்ணுபுரம் விருது விழா, செளமா இலக்கிய விருது ,ஜின்னாவின் படைப்பு குழும விருது, தேனி விசாகனின்,மேடை விருது , பரிதி இளம்பரிதியின் படித்துறை விருதுகள், தமுஎச விருதுகள் ,வடசென்னை தமிழ்சங்க விருதுகள். திருப்பூர் விருதுகள் எல்லாமே முக்கியமானது தான்…
அப்படியான சூழலில் உலக திருக்குறள் மையத்தின் விருதுகளும் தற்போது பட்டியலில் இணைகிறது.
உலக திருக்குறள் மையம் சமீபத்தில்முனைவர் தமிழ் மணவாளனுக்கு தமிழ் செம்மல் விருது வழங்கியுள்ளது . செம்மல் என்ற சொல்லுக்கு தலைமை ,பெருமையில் சிறந்தவன், நிபுணன்..என்றெல்லாம் பொருள் உண்டு.
உண்மையிலேயே தற்கால கவிஞர்களில் எத்தனை பேருக்கு மரபு இலக்கியம் புலமை உண்டு தமிழ் இலக்கணம் தெரியும் ? மொழி பெயர்ப்பு மேற்கத்திய நூலகளை படித்து அதன் பெயர்களை மேற்கோளை சர்வசாதாரணமாக சொல்லி பம்மாத்து காட்டுவது எளிது. தமிழ் அறிவு உண்டா எனில் கொஞ்சம் யோசிக்கவேண்டியிருக்கும்.
தமிழ் மணவாளன் சந்தம் விருத்தம், வெண்பா எழுதுவதில் கில்லாடி ,தொல்காப்பியம் படித்தவர். சங்க இலக்கியம் தெரிந்தவர் .அதன் பின்பே மரபு கவிதை வழியாக புது கவிதை ஊடே நவீனகவிதை வந்தவர்.
செம்மல் உள்ளமொடு செல்வீராயின –என்று சிறுபாணாற்று பாடலில் ஒரு வரி வரும் .செம்மல் என்பது வெறும் மொழிக்கானது மட்டுமல்ல நல்ல மனதுக்கானதும் தான் என்பதை சிறுபாணாற்று பாடல் சொல்கிறது,
நண்பர் முனைவர் ( இந்த பட்டமும் ஆய்வு செய்து வாங்கியதுதான்) தமிழ் மணவாளன் அவர்களுக்கு தமிழ் செம்மல் என்ற விருது வழங்கப்பட்டதற்கு அந்த அமைப்புக்கும் நன்றி
நண்பரே இனி தமிழ் செம்மல் என்ற அடைமொழியை உங்கள் பெயருக்கு முன் கம்பீரமாக நீங்கள் பயன் படுத்தலாம்
வாழ்த்துக்கள்
– அமிர்தம் சூர்யா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி