உருவ கேலிகள்

 தமிழிசை சௌந்தரராஜன்புதிய தலைமுறை சேனலில் நடந்த சாய்பல்லவி உருவ கேலி தொடர்பான விவாத நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். தான் எதிர்கொண்ட உருவ கேலிகள் குறித்து அவர் உருக்கமாக கருத்து தெரிவித்தார். அவர் தனது பேச்சில், நான் உருவத்தை வைத்து தொடுக்கப்பட்ட கேலி கிண்டல்களை மிக துணிச்சலாக எதிர்கொண்டு இருக்கிறேன். கேலி, கிண்டலுக்கு ஆளாகும் நபர்களுக்குத்தான் மனசு எவ்வளவு காயம் அடையும் என்று தெரியும். கிண்டல்களால் நான் காயப்பட்டு இருக்கிறேன். என்னுடைய திறமையாலும், அதிக பணியாலும், அதிக உழைப்பாலும்தான் அந்த காயங்களை நான் ஆற்றினேன்.
உருவ கேலிகள்
எல்லோரும் ஒன்று பெரிய மகாத்மாக்கள் கிடையாது. யாராவது ஏதாவது சொன்னால் நமது மனசு வலிக்கும். மக்கள் சொல்லும் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு செல்ல முடியாது. சிலரின் கருத்துக்கள் நம்மை மிக ஆழமாக காயப்படுத்தும். நான் சிலர் என்னை உருவ கேலி செய்த போது அதை புறந்தள்ளிவிட்டு போய் இருக்கிறேன். ஆனாலும் பல முறை காயப்பட்டு இருக்கிறேன்.
பரட்டை என்று கிண்டல்
குள்ளமாக இருப்பதோ, கருப்பாக இருப்பதோ, தலை முடி நன்றாக இல்லாமல் இருப்பதோ நம்முடைய தவறு கிடையாது. என்னை கூட பரட்டை என்றெல்லாம் கிண்டல் செய்துள்ளனர். எல்லாவற்றிலும் அழகு இருக்கிறது. அதனால்தான் பண்டைய காலத்தில் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று கூறினார்கள். ஆண்கள் மீதான பாடி ஷேமிங் இப்படி அதிகம் இல்லை. ஆனால் பெண்களை இப்படி அதிகம் கேலி செய்கிறார்கள்.
பாடி ஷேமிங்
அதேபோல் குள்ளச்சி, நெட்டச்சி, கறுப்பி என்றெல்லாம் பெண்களை விமர்சனம் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள். பெண்கள் முன்னேறுவதை தடுக்க முடியாத சமூகம், அவர்களை காயப்படுத்தி அவர்களின் வேகத்தை தடுப்பதற்கான எதிர்மறையான எண்ணம்தான் இது. சாய் பல்லவி மீதான விமர்சனமும் அப்படிப்பட்ட எதிர்மறையான தாக்குதல்தான் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சாய் பல்லவிக்கு ஆதரவாக தமிழிசை பேசி இருக்கும் இந்த கருத்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
நன்றி: ஒன்இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,