காத்திருக்கிறேனடா காதலா/ரேகா

 
பல மைல்களுக்கு அப்பால்

நீ இருந்தாலும்

உன்னைப் பற்றிய 

என் நினைவலைகள் எப்போதும் 

உன் நெருக்கத்திலே 

இருக்கிறது


எதிர்பார்ப்புகள் 

ஏமாற்றங்களை தரும் என்பதை 

நான் அறிவேன்


உன்னை குறித்தான எதிர்பார்ப்பு களிலேயே 

என் நாட்கள் நீண்டு 

கொண்டிருக்கிறது

 வாழ்வதற்கான காரணமும் 

தோன்றுகிறது


உன் 

இரவுகளில் எப்போதும்

 யாரேனும் துணைக்கு

 இருக்கத்தான் செய்கிறார்கள்


என் இரவுகளில் 

உன் நினைவுகள்

 மட்டும்

 எப்போதும் என்னோடு

உறக்கத்தின் பல நேரங்களில் கனவுகளிலும் 

நீ என்னோடு


என்னைப்பற்றி

 சிந்திப்பதற்கான நேரம் 

உனக்கு உண்டா என்று

 எப்போதும் 

எனக்கு ஐயமில்லை


காரணம் 

தினம் வரும் 

விக்கல் சொல்கிறது

 என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்

 என்று


புனிதமானதா

 புண்ணியமானதா

 என்றெல்லாம் எனக்கு

 தெரியாது


நாளை காலை வரவேண்டும்

காலையில் என்னை நான் ஆரோக்கியம் செய்ய வேண்டும்

என்னை அழகாய் அலங்காரம் செய்ய வேண்டும் என்கிற ஆசை எல்லாம்


தொடர்ந்து வருவதற்கு

 நீ ஒரு காரணம்


நினைவாய் என் கனவாய்

வந்து கொண்டே இரு என்னோடு


தொட்டுவிடும் தூரத்தில் நீ இல்லை என்றாலும்

என்றாவது எட்டிப் பிடித்து விடுவேன் உன்னை என்கின்ற நம்பிக்கையில் இந்த இரவு இனிதாகட்டும்


காத்திருக்கிறேனடா காதலா

என்னை நீ வந்து அடையும் வரை பூத்திருப்பேனடா 

காதலா---ரேகா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை