வாழ்க்கையில சிரஞ்சீவியாக சில பேர்தான் வாழ முடியும்

 வாழ்க்கையில சிரஞ்சீவியாக சில பேர்தான் வாழ முடியும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி சாரையெல்லாம் பார்க்க முடியுமான்னு ஒரு ஏக்கத்தோடு இருந்தோம் அந்தக் காலத்தில... அந்த வயசுல.


அப்புறம் நான் திரைத்துறைக்கு வந்தபிறகு இரண்டு பேரையும் வெச்சு சினிமா எடுத்தது, எம்.ஜி.ஆர் என்னைக் கலை வாரிசுன்னு சொன்னது எல்லாம் மிகப்பெரிய வரப் பிரசாதம். அந்த வகையில நான் உண்மையில பாக்யராஜ் என்பதை நான் பாக்யமாகக் கருதுறேன். என் அம்மா எனக்கு பாக்யராஜ்னு பெயர் வச்சதும் ரொம்ப தீர்க்கதரிசனத்தோடதான்னு நினைக்கிறேன்.
அவர்களோட இடத்தை இனி நிரப்புவதற்கு யாரும் இல்லை. அவர்களிடம் பெற்ற பெயரைக் காப்பாற்றுவதற்கு இன்னும் என்ன சாதிக்க முடியும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களின் பெயரைக் காப்பாற்றி என்னுடைய பெயரையும் நல்லவிதமாகத் தக்கவைத்துக் கொள்வேன்.
சிவாஜி சாரையும் என்னால மறக்க முடியாது. இமயத்துடன் இணைவதில் பெருமை கொள்கிறேன் என்று தான் 'தாவணி கனவுகள்`ல டைட்டில் கார்டு போட்டிருந்தேன். அவரையும் வெச்சு சினிமா எடுக்க முடியுமான்னு நினைத்தவேளையில் அவரை வைத்து டைரக்‌ஷன் பண்ணியது பெரிய விஷயம்.
நான் அதிகம் படிக்கவில்லை. இங்கிலீஷ்ல வீக். இதை எப்படியோ என் குழந்தைகள் ஸ்மெல் பண்ணிட்டாங்க போல. கரெக்டா என்கிட்ட மட்டும் தமிழில் பேசிவிட்டு, அவங்க அம்மா, அத்தை, மாமா எல்லார்கிட்டயும் இங்கிலீஷ்ல பேசுவாங்க. என்கிட்ட பேசும்போது மட்டும் டக்குன்னு தமிழ் வந்திரும். அதுக்கு அவங்க அம்மா, ஏன்டா டாடிகிட்ட மட்டும் அப்படின்னு கேட்டா... டாடியை கஷ்டப்படுத்த வேண்டாம்லாமான்னு சொல்லுவாங்க.
ஆங்கிலம் என்பது கம்யூனிகேசனுக்குத்தான் தேவை. திறமை அடிப்படையில் இல்லை. இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவு தமிழன் பெயர் வாங்கிவிட்டான். நம்மகிட்ட இருக்கிற தமிழ் நமக்கு சந்தோஷமான விஷயம்.
வீட்டில் தெலுங்கு பேசுறதனால நானும் பேசுவேன். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என சகல பாஷைகளும் எங்கள் வீட்டில் உண்டு. பூர்ணிமா தெலுங்கு பேசுவாங்க. மலையாளத்துல பூர்ணிமா பிஸியாக நடித்த பின்புதான் தமிழுக்கு வந்தாங்க. எங்க வீட்ல எல்லா மொழிகளும் இருக்கு.
இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா எல்லாரும் சினிமா துறையில இருக்கோம். எங்கள் குடும்பமும் கலைக் குடும்பம்தான். எதிர்காலத்துல வர்றவங்களும் சினிமா துறையைச் சார்ந்தவங்களாகத்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். எனக்கு சினிமாவைத் தவிர்த்து ஒன்றும் தெரியாது என்பதை நான் மிகப்பெரிய பலமாகவும் பெருமையாகவும் நினைக்கிறேன்.
- பாக்யராஜ்
நன்றி: இந்து தமிழ்திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி