சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 



சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் இந்த செயலியை துவக்கி வைத்தார். 


தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர். 


காவல் துறையினர் இந்த செயலியை அவர்களது தொலைபேசி மூலமாகவே CLAPP என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் அவர்களுக்கு தேவைப்படும் விடுப்புகள், ஏற்கனவே அவர்கள் எடுத்திருக்கும் விடுப்புகளை பதிவு செய்வதற்கும் இந்த செயலி பயன்படும்.


இதற்கு முன்பு இருந்து முறையில் காவலா்கள் நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்து அதற்கு குறித்த விடுப்பு விண்ணப்பம் எழுதி தான் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. 


இனி வரக்கூடிய கால கட்டங்களில் காவல் துறையினர் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே விடுப்பு எடுக்கும் வகையில் இந்த செயலியானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 


இந்த செயலி மூலம் காவல் துறையினர் அவர்களுக்கான சாதாரன விடுமுறை மற்றும் மருத்தவ சேவை தொடர்பான விடுப்பு நேரடியாக இந்த செயலியில் பதிவு செய்யலாம். 


விடுப்பு பதிவு செய்த பின் அதற்கான பதிலை அதிகாரிகள் அதில் பதிவிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,