அடிச்சி போட்ட மாதிரி உடம்பு வலி.. ஓமிக்ரான் லேசான பிரச்சினையில்லை..

 

அடிச்சி போட்ட மாதிரி உடம்பு வலி.. ஓமிக்ரான் லேசான பிரச்சினையில்லை.. வாட்டும் அறிகுறிகள்!


ஓமிக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில் ஓமிக்ரான் கொரோனாவின் அறிகுறிகள் தொடர்பாக அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு அமைப்பு சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் - கடந்த 2 ஆண்டுகளாகவே கிட்டதட்ட உலகின் அனைத்து

நாடுகளையும் அலறவிட்டுக் கொண்டிருப்பது இது தான். அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளும் இந்த வைரஸ் பாதிப்பில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைச் சமாளிப்பது பெரும் போராட்டமாக உள்ளது. ஆல்பா, டெல்டா இப்போது ஓமிக்ரான் என உருமாறிய கொரோனா வைரஸ்கள் அடுத்தடுத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இப்படியே வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் வேக்சின் அளிக்கும் தடுப்பாற்றலில் இருந்து கூட வைரஸ் தப்பிக்கும் ஆபத்து உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒவ்வொரு உருமாறிய கொரோனாவுக்கும் அறிகுறிகளும் கூட சற்றே மாறுபடுகிறது. இதனால் வைரஸ் பாதிப்பை எளிதாகக் கண்டறிவதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இப்போது அச்சுறுத்தும் ஓமிக்ரானுக்கு காய்ச்சல், உடல் வலி, தொண்டை கரகரப்பு, வயிற்றுப்போக்கு முக்கிய அறிகுறியாக உள்ளது
உதடு மற்றும் நகங்கள் இதனிடையே அமெரிக்காவின் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு சில கூடுதல் அறிகுறிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. உதடு மற்றும் நகப்பகுதிகளில் நிறம் மாறுவதும் ஓமிக்ரான் கொரோனாவின் அறிகுறியாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வழக்கமான கொரோனா அறிகுறியான சுவை மற்றும் வாசனை இழப்பு குறைவாகவே ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறல் மூச்சுத் திணறல் பிரச்சனைகள் ஓமிக்ரானால் ஏற்படுவதில்லை என்பதால் அவை தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், ஓமிக்ரானை சாதாரண காய்ச்சல் போல எடுத்துக் கொள்ளக்கூடாது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முதல் சில நாட்கள் மட்டுமே அதிக காய்ச்சல் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் டெல்டா முதல் ஓமிக்ரான் வரை அனைத்து வகையான கொரோனாவுக்கும் பொதுவான அறிகுறிகளாகவே இருக்கின்றன. தொண்டைப் புண் என்பது ஓமிக்ரானின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். இது டெல்டாவில் அதிகம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தலைவலி, சோர்வு, கடுமையான உடல் வலி ஆகியவை டெல்டாவை காட்டிலும் ஓமிக்ரானின் முக்கிய அறிகுறிகளாகும்.
சுவாச பிரச்சனை ஓமிக்ரானின் மிகவும் அரிதான அறிகுறியாகும், இது டெல்டாவில் மிகவும் முக்கிய அறிகுறியாக இருந்தது. இது குறித்து டாக்டர் ஸ்வாப்னீல் பரிக் கூறுகையில், "மேல் சுவாச அறிகுறிகளான சளி, இருமல், தொண்டைப் புண் ஓமிக்ரானில் முக்கிய அறிகுறியாக உள்ளது. மேலும், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு. முதுகு மற்றும் மூட்டு வலியும் ஓமிக்ரானின் பொதுவான அறிகுறிகளாக உள்ளது" என்று தெரிவித்தார்

அதாவது முதல் சில நாட்களுக்குக் காய்ச்சல், அதிகப்படியான உடல் வலி, தொண்டைப் புண், வயிற்றுப்போக்கு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. அதேபோல ஏற்கனவே கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை ஓமிக்ரான் கொரோனா மீண்டும் தாக்குவதற்கான வாய்ப்புகளும் மிக மிக அதிகம். இதனால் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இது முக்கிய பிரச்சினை என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளவேக்சின், நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளிட்டவற்றைப் பொறுத்து ஒவ்வொரு நபருக்கும் அறிகுறிகள் மாறுபடும். அதேபோல கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால் அடுத்து வரும் உருமாறிய கொரோனா வகைகள் எப்படி இருக்கும், அது எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஆய்வாளர்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை. மேலும், அடுத்து வரும் உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராக இந்த வேக்சின் செயல்படும் அல்லது அவை லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பது குறித்து எவ்வித உத்தரவாதமும் அளிக்க முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி