சில நேரங்களில் சில மனிதர்கள்./
சில நேரங்களில் சில மனிதர்கள். திரைப்பபத்தை குறித்து தன் எண்ணங்களை பதிவு செய்கிறார் கீர்த்தனா பிருத்விராஜ்
விபத்தை மையமாகக் கொண்ட 4 கதைகளின் கதாபாத்திரங்களின் மன மாற்றம் குற்றவுணர்வு கோபம் இவை தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.
தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வசிக்கும் அசோக் செல்வன் எதற்கெடுத்தாலும் தன் தந்தையின் மீது கோபத்தை வீசிக் கொண்டே இருக்கிறார்.
அசோக் செல்வனின் தந்தையான நாசர் சராசரி தகப்பனின் நிலையில் தனது நடிப்பை எப்போது போலும் அழகாக நடித்துள்ளார்.
அன்றோடு வேலையை விடும் அசோக் செல்வன் தன் தந்தை கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்து விடலாம் இன்று நல்ல நாளென்று கூறுவதை ஒரு நிமிடம் கூட காதில் வாங்காது தான் செய்வதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்.
கெளரவம், பணம், பெயர், புகழ், தன்னை விட உயர்ந்தவன் இல்லையென்ற பிரவின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு மனைவியான ரித்விக்காவிடம் கேட்கவே இல்லையென்று தங்களின் வாக்குவாதத்தில் நேர்ந்தது தான் அந்த விபரீதம் மற்றும் மனமாற்றம்.
லாட்ஜில் ரூம் சர்வீஸ் மேனேஜராக பணிபுரியும் மணிகண்டன் 24 மணிநேரமும் புகைப்பிடித்தலே முதன்மைத் தொழிலாக கொண்டுள்ளார். ஆனால்,வேறு வேலை வேண்டும் அதிக சம்பளம் வேண்டும் என்று பொலம்பும் மணிகண்டன் அதற்கு எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை.
அபி ஹாசன் புகழ்பெற்ற இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் ஓரே மகனாக நடித்துள்ளார். தனது முதல் படம் குறித்து அவருக்கும் தந்தைக்குமிடையேயான பிரச்சினையாக கதை நகர்கிறது.
தான் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடாததால் தான் விபத்து ஏற்பட்டது என்று குற்றவுணர்வில் துடிக்கும் மணிகண்டன் தனது நடிப்பு திறமையை செம்மையாக காட்டியுள்ளார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதுவாகவே மாறும் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அசோக் செல்வனின் காதலியாக நடிக்கும் ரியா இவற்றிற்கு எல்லாம் நீ தான் காரணம் என்று சொல்கிறார். அதை கேட்டு மனம் தளர்ந்து அழுகும் அசோக் செல்வனின் நடிப்பு அத்தனை வலியை தருகிறது.
செய்த தவறிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் பிரவின் மனைவி ரித்விக்காவிடம் இந்த சூழ்நிலையை எனக்கு சரி பண்ண முடியவில்லை. நீ உதவி செய்யென்று கேட்கும் தருவாயில் சில நேரங்களில் சில மனிதர்களின் நிலை புரிகிறது.
ஒரு நிமிடம் கூட பிறரின் வார்த்தையை உள்வாங்க முயற்சிகாது செய்யாத தவறுக்கு வருந்தும் அபி ஹாசனின் மாற்றமானது பார்ப்போர்க்கு வாழ்க்கை என்பது சுலபமானது. அதில் எல்லாம் வந்து போகும் என்பதை தெளிவாக்குகிறது.
நண்பனின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது கதறும் இளவரசு அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.
இயக்குனர் விஷால் வெங்கட் அவர்கள் சொல்ல வந்ததை எளிமையாக சொல்லி விட்டார்.
உன் மீது தவறு இல்லையென்று உனக்கு தெரிந்தால் போதுமானது. அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்ற வசனம் தொடக்கமும் முடிவுமாக இருந்தது.
நாம் அனைவரும் ஏதோவொரு விதத்தில் மற்றவரை வருத்தப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்யும் தவறுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மன்னிப்பைக் கேட்டுக் கொண்டு மாறுவது என்பது உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஆரோக்கியத்தை அளிக்கிறது.
மாற்றம் உங்களிடமே!
- கீர்த்தனா பிருத்விராஜ்
Comments