தேசிய வாக்காளர் தினம்
தேசிய வாக்காளர் தினம்
இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 25ஆம் தேதியை 2011ஆம் ஆண்டில் தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும், அதன் முக்கியத்துவத்தையும் மற்றும் ஓட்டுரிமை என்பது ஒவ்வொருவரின் உரிமை என்பதை உணர்த்துவதற்காகவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது
Comments