உலக அளவில் டிரெண்டான நம்ம கொல்லி மலை..

 

உலக அளவில் டிரெண்டான நம்ம கொல்லி மலை..

நாமக்கல்லில் இருக்கும் கொல்லி மலை தற்போது உலக அளவில் டிரெண்டாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பலர் இந்த மலையின் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் கொல்லி மலையும் ஒன்று. இரண்டு முக்கியமான காரணங்களுக்காக இந்த கொல்லி மலை மக்கள் இடையே பிரசித்தி பெற்றது. முதல் காரணம் இந்த மலையின் மருத்துவ குணம்.
இந்தியாவில் அதிக மூலிகைகள் அடங்கிய மலைகளில் கொல்லி மலை மிக முக்கியமானது. பல நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு அளிக்க கூடிய மூலிகைகள் இப்போதும் கொல்லி மலையில் உள்ளது.
கொல்லி மலை பல லட்சம் அரிய மூலிகைகள் கொல்லி மலையில் காணப்படுகிறது. சித்த மருத்துவம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் கொல்லி மலை மூலிகைக்கு என்று தனி இடம் உண்டு. மருத்துவ ரீதியாக கொல்லி மலைக்கு இப்போதும் கூட பல நூறு பேர் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் இந்த மலையை காக்க வேண்டும். அதிக அளவில் சுற்றுலா பயணிகளை அனுமதித்து இங்கே குப்பைகளை போட கூடாது என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலா பயணிகள் மருத்துவ குணம் போக இந்த கொல்லி மலை பார்க்கவே ராட்சச உருவத்தோடு மூச்சை வாங்கும் அளவிற்கு இருக்கும். இங்கு மொத்தம் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. நாமக்கல் முதல் திருச்சி மாவட்டம் வரை இந்த மலை பரந்து விரிந்து காணப்படுகிறது. மொத்தம் 1300 மீட்டர் உயரம் கொண்டது. அதேபோல் 300 கிமீ வரை நீளம் கொண்டது. மிக அதிக உயரம், 70 கொண்டை ஊசி வளைவுகள், ரம்மியமான தோற்றம் காரணமாக இந்த மலைக்கு பைக் ரைடர்ஸ் வரத்து அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் இந்த மலையின் டாப் ஆங்கிள் ட்ரோன் புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலானது. இதையடுத்து பல வெளிமாநில மக்கள், வெளிநாட்டு பயணிகள் இங்கே ரைட் வருவது அதிகரித்துள்ளது. பைக், கார்களில் பலர் இங்கே சுற்றுலா மேற்கொண்டு வருகிறார்கள். இங்கு இருக்கும் சிறு சிறு அருவிகள், உச்சத்தில் இருந்து அண்டை மாவட்டங்களை பார்க்கும் ரம்மியமான காட்சிக்காக பலர் இங்கே வர தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் ஆனந்த மஹிந்திரா மற்றும் எரிக் சொல்ஹைம் ஆகியோரின் ட்விட்களால் கொல்லி மலை உலக அளவில் பேமஸ் ஆகியுள்ளது.R

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,