*பார்லி கஞ்சி. நன்மைகள்.

**பார்லி கஞ்சி. நன்மைகள்.*பார்லியின் கரையாத நார்ச் சத்தான ப்ரோபியோனிக் அமிலம் உள்ளது.இது இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.


இது, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச் சத்தின் சிறந்த மூலமாக இருப்பதாலும் குறைந்த கொழுப்பு இருப்பதாலும் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.


உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள், உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் பார்லி கஞ்சியை அருந்துபவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


 

பார்லி தானியங்களில் எந்த வகையான புற்றுநோய்களையும் தடுக்கக்கூடிய ஆற்றல் மிகுந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக பார்லி தானியங்களை உணவாக அதிகம் பயன்படுத்தும் சீன நாட்டின் யுனான் மாகாணம் மற்றும் திபத்திய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு எந்த வகையான புற்று நோய் பாதிப்புகளும் ஏற்பட வில்லை என மருத்துவ ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்று மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுப்பதும், நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.

பார்லி தானியங்களில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் இருக்கின்றன. பார்லி தானியங்களை சாறு பதத்தில் செய்து, தினமும் அருந்தி வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடைகின்றன. மேலும் வயதானவர்களுக்கு வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும் சதவீதம் குறைந்து இருப்பதாக மேலை நாட்டு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


நீரிழிவு வகை 2 க்கு நல்லது :


பார்லி வகை 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை குறைப்பதன் மூலமும், தீவிரமான உடல் பயிற்சியின் மூலமும், முழு தானியங்களை உணவில் சேர்ப்பதன் மூலமும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.


நீரிழிவு நோயாளிகளின் தினசரி உணவில் அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் சேர்க்கப்பட வேண்டும்.


பார்லி தானியத்தில் அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, குறிப்பாக பீட்டா-குளுக்கன் என்ற கரையக்கூடிய நார்ச் சத்து குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைக்கிறது.


புற்றுநோய் வராமல் தடுக்கிறது :


பார்லியில் தாவர லிக்னன்கள் எனப்படும் ஒரு வகையான பைட்டோ நியூட்ரியன்ட்கள் உள்ளன.


அவை குடலில் என்டோரோலாக்டோன் எனும் விலங்கு லிக்னன்களாக மாற்றப்படுகிறது.


இது மார்பக மற்றும் பிற ஹார்மோன் தொடர்பான புற்றுநோய்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது.


இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது :


கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்பு பொருட்கள் உரைதல் அல்லது படிதல் காரணமாக பெருந்தமனி தடிப்புத், தோல் அழற்சி போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.


பார்லியில் நியாசின் (வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்) உள்ளது. இது ஒட்டுமொத்த கொழுப்பு மற்றும் லிப்போபுரோட்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் களிடமிருந்து பாத்துக்காக்கிறது.


பெண்களுக்கு நல்லது :


மாதவிடாய் நின்ற பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் அல்லது இருதய நோய்கள் இருந்தால் வாரத்திற்கு 6 முறையாவது பார்லி உணவு சாப்பிட பரிந்துரைக்கப் படுகிறது.


முடக்கு வாதம் :


நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


பார்லி போன்ற கரையக்கூடிய நார் சத்து கொண்ட சில முழு தானியங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க உதவுகிறது.


மூட்டுகள் அல்லது கீல்வாதம் வீக்கம் தொடர்பான எந்த வலியை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.


மலட்டு தன்மையை நீக்குகிறது :


பார்லியில் அர்ஜினைன் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு இருப்பதாக அறியப்படுகிறது.


இவை இரண்டும் ஆண்குறி விறைப்பிண்மையை சரி செய்கின்றன. அர்ஜினைன் விந்து மற்றும் கரு முட்டை உற்பத்தியை அதிகரிக்கிறது.


பார்லி தானியங்களை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பாலியல் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.


நச்சுத் தன்மையை நீக்குகிறது :


பார்லியில் நார்ச் சத்து நிறைந்துள்ளதால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நச்சுத்தன்மையை நீக்குகிறது


மேலும் இதில் உள்ள நார்ச் சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு ஊக்கியாக செயல் படுகிறது.


இந்த பாக்டீரியாக்கள் நார்ச் சத்தை நொதிக்க செய்து பியூட்ரிக் அமிலத்தை உருவாக்குகிறது. பிட்யூட்ரிக் அமிலம் பெருங்குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உதவுகிறது.


மேலும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மூலநோயின் வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கிறது.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,