மக்கள் சேவையில் சிறப்பாக செயல்படும் சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா சங்கம்
மக்கள் சேவையில் சிறப்பாக செயல்படும்
சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா சங்கம்
அதனுடைய பிரதிநிதிகளாக பல அரிமாசங்கங்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் குறிப்பாக
சென்னையில் இயங்கி வருகின்றன.
அவற்றில்
ஒன்றுதான் ‘சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா
சங்கம்.’
தொடர்ச்சியாக
பல நல்ல செயல் திட்டங்களை செய்து வரும் இச்சங்கம்
இந்த மாதம்
அதாவது ஜனவரி 2ம் தேதி அன்று சென்னை திருவல்லிக்கேணி
வெங்கட்டரங்கம்
தெருவிலுள்ள ‘பெருநகர சென்னை நடுநிலைப்பள்ளியில்
அப்பகுதி மக்களுக்காக கண் புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ முகாமும் மற்றும் பல் பரிசோதனையும் முற்றிலும் இலவசமாக அப்பகுதி மக்களுக்காக ஏற்பாடு செய்து அதை நல்ல முறையில் மிகவும் பாதுகாப்பான முறையிலும் சமூக இடைவெளியும் முக கவசம் அணிந்து சிறப்பாக நடத்தினார்கள்.
‘சங்கர நேத்ராலாயா மருத்துவ மனையும் Gita’s
dentisry and Divya’s Dental Care ஆகிய பல்மருத்துவ அமைப்புகளுடன்
இணைந்து அங்கு வாழ் ஏழை மக்களுக்கு சேவை செய்யப்பட்டது
இது மட்டுமில்லால்
அன்று மருத்துவ முகாமுக்கு வந்த மக்களுக்கும்
,அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும்
‘Shree Baby Caterer’s ‘உடன் ‘அறம்
செய்ய விரும்பு அரிமா சங்கத்துடன் இணைந்து அன்ன தானம் செய்யப்பட்டது
சென்னை ‘அறம்
செய்ய விருமபு அரிமா சங்கத்தின்’ நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் அப்பகுதி மக்கள் தங்களது நன்றியினையும் பாராட்டுதல்களையும்
தெரிவித்தார்கள்
பல ஏழை எளிய
மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் களமிறங்கி பல சேவைகளை செய்து வரும்
சென்னை அறம்
செய்ய விரும்பு அரிமா சங்கத்திற்கு நமது பீப்பிள் டுடே பத்திரிகையின் சார்பாக வாழ்த்துகளை
தெரிவித்து கொள்கிறோம்
Comments