வெங்காயம் சேர்த்து இப்படி புதினா சட்னி செஞ்சு பாருங்க

 வெங்காயம் சேர்த்து இப்படி புதினா சட்னி செஞ்சு பாருங்க 





விதவிதமான சட்னி வகைகளில் புதினா சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவை உடையதாக இருக்கும். புதினாவின் சுவைக்கு அடிமையாகி போனவர்கள் அடிக்கடி துவையல், சட்னி செய்து சாப்பிடுவார்கள். பசியை தூண்டக் கூடிய இந்த புதினா இலைகள் உடல்நலக் கோளாறுகளை சரி செய்யக்கூடியது. இதன் மணமும், குணமும் முழுமையாக நமக்குக் கிடைக்க இப்படி ஒரு புதினா சட்னி



புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்: புதினா – ஒரு கட்டு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, வெங்காயம் – 2, உளுத்தம் பருப்பு – கால் கப், பூண்டு – 4, இஞ்சி – 2 துண்டு, வர மிளகாய் – 5, தேங்காய் – ஒரு கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், தாளிக்க எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.


புதினா சட்னி செய்முறை விளக்கம்: முதலில் புதினா இலைகளை காம்பைப் பிடித்துக் கொண்டு ஒரு முறை நன்கு தட்டிக் கொள்ளுங்கள் அப்போது தான் பூச்சி, புழுக்கள் இருந்தால் கீழே விழுந்துவிடும். பின்னர் பச்சையாக இருக்கும் இலைகளை மட்டும் தனியாக ஆய்ந்து எடுத்து அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் சில்லு சில்லாக நறுக்கி வைத்துக் கொள்ளலாம் அல்லது துருவியும் வைத்துக் கொள்ளலாம்.


இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். உளுந்து பாதி அளவு வறுபட்டதும், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.


வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும் புதினா மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை அலசி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு கொஞ்சமாக புளி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இதனை சேர்த்து தேங்காய் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைஸாக இல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்.

அதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த தாளிப்பை புதினா சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,