எஸ்.பஞ்சு பிறந்தநாள் இன்று!

 ரா. கிருஷ்ணன் (1909–1997) மற்றும் சா. பஞ்சு (1915–1984) ஆகிய இருவரும் தமிழ் சினிமா கண்டெடுத்த இரட்டையர்கள். தனித்தனியே பிறந்து வளர்ந்து பின்னாளில் சினிமா என்ற அச்சாணியின் மூலம் ஒன்று சேர்தவர்கள். இவர்கள், இருவரும் இணைந்து கிருஷ்ணன்-பஞ்சு என்ற பெயரில் 50இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியிருந்தனர்.


பூம்பாவை, நல்ல தம்பி, பராசக்தி, ரத்தக்கண்ணீர், பைத்தியக்காரன், தெய்வப்பிறவி, சர்வர் சுந்தரம், பெற்றால்தான் பிள்ளையா, குழந்தையும் தெய்வமும் உள்ளிட்ட வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்தது.
தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத இரட்டையர்களில் ஒருவர்... எஸ்.பஞ்சு பிறந்தநாள் இன்று!
சா. பஞ்சு 1915ம் ஆண்டு ஜனவரி 24 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரத்தில் பிறந்தார். தொடக்கத்தில் பி. கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராகவும், எல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். தனது 69 ஆவது வயதில் சென்னையில் பஞ்சு காலமானார்.
நன்றி: ABP Nadu

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி