புத்தம் புது காலை விடியாதா.’/என் பார்வையில்


 

 

சமீபத்தில் நான் அமேசான்பிரைம்  ஓட்டி ட்டி தளத்தில் ரசித்த

ஐந்து கதைகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட

 படம்புத்தம் புது காலை விடியாதா.’

இது 2020 ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தம் புது காலை ஆந்தாலஜியின் இரண்டாம் பாகமாக புத்தம் புது காலை விடியாதா படம் வெளியிடப்பட்டுள்ளது.

 

பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, சூர்யா கிருஷ்ணா மற்றும் ரிச்சர்டு ஆன்டனி ஆகியோர் இயக்கி உள்ள 5 கதைகள் இணைந்தது தான் இந்த படங்கள்

 கொரோனாவால் மக்கள் எவ்வாறு தங்களின் நண்பர்கள், தந்தை, அன்பான உறவுகளை இழந்து தவிக்கிறார்கள் என்பது தான் புத்தம் புது காலை விடியாதா படத்தின் பொதுவான கதையம்சம் என சொல்லலாம்

 

இந்த படங்களைப்பற்றிய என்னோட கருத்துகளை இங்கே

பகிர்ந்து கொள்கிறேன்

1 .முகக்கவச முத்தம்

`புத்தம் புது காலை விடியாதாஆந்தாலஜியின் முதல் குறும்படம் .

இயக்குநர் பாலாஜி மோகனின் இந்தப்படம் ’. காவல்துறையின் கடைநிலைப் பணியாளர்கள் முருகன், குயிலி ஆகியோருக்கு இடையிலான காதல் கதையும், அவர்கள் நிறைவேற்றும் காதல் கதையும் இதன் கதைக்களம்.

கொரோனா காலத்தின் முன்களப் பணியாளர்களான காவல்துறையினர்  பாராட்டப்படுகிறார்கள்

 கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற கோரும் விளம்பரப் படம் போன்றே  அதன் உருவாக்கமும் இதனை ரசிக்க வைக்கிறது

. அதே வேளையில், ஊரடங்கு காலத்தில் தமிழக காவல்துறையினரின் மீது அதிகளவில் விமர்சனங்கள் மற்றும்  -பாஸ் நடைமுறை  இவற்றை  கதையாக பாலாஜி மோகன்

 

எந்தவித சுவாரஸ்யமும் இல்லாத ஒரு  திரைக்கதையை தந்து  படத்தை தொடர்ந்து பார்ப்பதில் சோர்வுதான் மிச்சம்

. டீஜேவும், கௌரி கிஷனும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவர்கள் இருவருக்கும் காவலர் கதாபாத்திரம் சுத்தமாக பொருந்தாமல்  படத்தின் திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கலாம் என தோன்ற வைக்கிறது. ஆந்தாலஜியின் முதல் எபிசோட் ஏமாற்றத்தையே கொடுத்தது.

2 .லோனர்

ஹலிதா சமீம் இயக்கத்தில் லிஜோமோல், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள இரண்டாவது படம்  லோனர்ஸ்.

ஊரடங்கு ஏற்படுத்தும் மன அழுத்தத்திற்கான மருந்து, நம்மைச் சுற்றி நம்மைப் போலவே தனியாக வாழும் மனிதர்கள் தாம் என்று பேசியிருக்கிறது `லோனர்ஸ்

 

தனது வழக்கமான திரைக்கதையின் வழியே காதல்தோல்வியிழும், நட்பின் இழப்பாலும் வாடும் இருவர் ஒருவரையொருவர் சந்தித்து ஆறுதல் சொல்லி நெருக்கமானால் எப்படியிருக்கும் என்பதை படைப்பாக்கியிருக்கிறார் ஹலிதா சமீம்.

 காதல் தோல்வியில் உழலும் லிஜோ மோலை காதல்தோல்வியுடன், கொரோனா ஊடங்கும் சேர்த்து அழுத்தும் கால கட்டத்தில் . நண்பனின் இழப்பு அர்ஜூன் தாஸை மன உளைச்சலுக்கு ஆளாக்க வீடியோகால் வழி பிறக்கிறது ஆறுதல்தான் கதைக்களம்.

 'உலகத்தின் சிறந்த போதை பேச்சு போதை' என்பதை தன் முந்தைய படங்களில் கூறிய ஹலிதா சமீம், இந்த கதையில் அதிக  உரையாடல்களை வைத்திருக்கிறார்.

உரையாடல்கள் மிகவும் ரசிக்கவைக்கிறது

 ஆண் என்றால் பெரும்பாலும் காதல் தோல்வி, இழப்பை நினைத்து உருகுபவராகவே காட்சிப்படுத்தி காட்டும் தமிழ்ப்படங்களில், நண்பனின் பிரிவை எண்ணி தவிக்கும் களம் புதிதாகவே இருக்கிறது

 வீடியோகால் திருமணங்கள் கொரோனா ஊரடங்கின் கொடூரத்தை போகிற போக்கில் பதிவு செய்தது. திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள லிஜோமோல் சல்வார் மீது புடவை அணிந்தபடி அவர் கலந்து கொள்கிறார். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் மக்களின் வாழ்க்கையில் உள்ள வேறுபாடுகளை காட்டுவதாக இந்த கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது.

 மொத்த ஆந்தாலஜியிலும் மிகச் சிறந்த படமாக, ஹலிதா ஷமீம் இயக்கிய `லோனர்ஸ்படத்தைச்சொல்லாம்

. பல்வேறு விவகாரங்கள்  அழகான உரையாடல்களின் வழியாக ரசிக்க வைத்திருப்பதே இந்த படத்தின் வெற்றி என சொல்லலாம்

யாருங்க இந்த அர்ஜுன் தாஸ் ,அட அவர் வாய்ஸ் கேட்டு மிரண்டு போய் அவர் ரசிகராகிவிட்டேன் இப்போ

 

.

3 .மெளனமே பார்வையாய்

முந்தைய படத்தில் பெரும்பாலும் உரையாடல்கள் என்றால், 'மௌனமே பார்வையாய்' எபிசோட்டில் உரையாடலே இல்லை. ஒரு வார்த்தை கூட இல்லாமல் அட்டகாசமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் மதுமிதா.,இவர்  இயக்கிய இந்த படத்தில்  நதியா, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அன்பை பகிர வார்த்தை தேவையில்லை, பார்வை மட்டும் போதும் என்பதை மிக அழகாக காட்டி உள்ளனர்.

 ஜோஜூ ஜார்ஜ், நதியா இருவரின் நடிப்பு மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. கணவன் மனைவிக்குள் சிறிய சண்டையும், அதையொட்டி நிகழும் சம்பவங்களும் தான் கதை. இருவருக்குள்ளும் பேசிக்கொள்ளாதபோதும் அவர்களிடைய  உருவாகி விட்ட ஈகோ மற்றும் அவர்களின் உள்ளே காதல் நிழலாடும் விதம் மிக அழகு

. கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயே சமூக இடைவெளி உருவாகியிருந்ததை காட்சிப்படுத்தியவிதம் ரியலிசம்

 

. திரைக்கதையில் சேர்க்கப்பட்ட சின்ன சின்ன விஷயங்கள் ரசிக்க வைத்தது (செய்திப் பரிமாற்றங்கள் எல்லாம் இருமுவதும், போர்டில் எழுதுவதும், மிக்ஸியைத் திருகுவதும் என இருக்கும் சூழல்)படம் அதன்போக்கில் நகர்வதுதான் .பெரிய திருப்பங்கள்  இல்லை

 

.. வசனங்கள் வருமா என நாம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் இருவருக்கும் இடையிலான பரிதவிப்பு நம்மை ஏதோ செய்கிறது

. இறுதியில் ஒரே ஒரு வசனம் , மௌனம் கலைக்கப்பட்டு  இந்தப் படத்தையும் நல்ல  படமாக மாற்றிவிடுகிறது

 

 

 

4. `தி மாஸ்க்

சூர்யா கிருஷ்ணன் இயக்கி உள்ள தி மாஸ்க் கதையில் சனந்த், திலிப் சுப்புராயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 தன்பால் ஈர்ப்பாளரின் காதல் குறித்து பேசுகிறது படம்

. இடையில் பழைய நண்பர் ஒருவரை சந்திக்கிறார் நாயகன் சனந்த். அதையொட்டி நடக்கும் சம்பவங்கள் தான் தி மாஸ்க்.

 சமூகத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் பொய்யான முகமூடி ஒன்றை அணிந்துகொண்டே வாழவேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்த்த இந்த டைட்டிலை தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஆனால், படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து போகிற போக்கில் தொட்டுவிட்டு போகிறதே தவிர, அதன் சிக்கல்களை முழுமையாக சொல்லவில்லை. சனந்த், திலிப் சுப்புராயன் நடிப்பில் எந்த குறையும் இல்லை  ஆனால், படத்தின் கலர் டோனில் இருக்கும் வித்தியாசம் திரைக்கதையில் இல்லாதது  கதையில் இன்னும் மெனக்கெட்டிருக்கவேண்டிய தேவையை தி மாஸ்க் உணர்த்துகிறது.

 

இறுதிக்காட்சியை எழுதிவிட்டு, பிற காட்சிகளை எழுதியிருக்கிறார் போல  தோன்ற வைப்பதை மறுக்க முடியாது

அதுவே  அதை வலிந்து திணித்ததாக மாறியிருப்பது துரதிருஷ்டவசமானது என சொல்லலாம்

 இந்தக் கதைக்களத்தை தைரியமாக முன்வைத்ததிற்காக படக்குழுவினரைத் தாராளமாகப் பாராட்டவேண்டும்

5 , நிழல் தரும் இதம்

 ரிச்சர்ட் ஆன்டனி இயக்கத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, நிர்மல் பிள்ளை ஆகியோர் நடித்துள்ள கதை நிழல் தரும் இதம்.

. ஐஸ்வர்ய லட்சுமி ஒற்றை ஆளாக நின்று கதையை தாங்குகிறார். பெற்றோரின் அன்புக்காக ஏங்கி, தனிமையை துணையாய் கொண்டு வாழ்ந்த மகள் ஒருவரின் உணர்வுகளின்  கிழிசல்கள் தான் கதை

. பொறுமையாக நகரும் திரைக்கதை.. பாசத்தில் ஏங்கும் மகளின் உணர்ச்சியை கதைக்களமாக கொண்ட முயற்சி, அதை சரியான  திரைக்கதையில் சொல்லப்படவில்லை

 

. சோபி கேரக்டரில் வரும் ஐஸ்வர்ய லட்சுமி, தனக்கு போன் பண்ணும் தந்தைக்கு வழக்கம் போல் நான் பிஸியாக இருக்கிறேன் என பதிலளிக்கிறார். பிறகு அவரது தந்தை திடீரென உயிரிழந்த போது  அவரிடம் பேசாமல் தான் தவிர்த்தது போன்றவற்றால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி

 தந்தையில் மரணத்தின் சோகத்தில் இருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதை சொல்ல முயற்சித்தாலும் சம்பவங்கள் உயிரோட்டமில்லாமல் போவதால் கமை மனதை ஒட்டவில்லை

பிளஸ் . ஐஸ்வர்ய லட்சுமியின்  மிக அழகாக நடிப்பு

 

இந்தத் தொடரிலேயே சற்றே வித்தியாசமான முயற்சி

 துக்கத்தில் இருந்து மீளுதல் என்ற கதைக்களம்

மாஸ்க் அணிந்த கதாபாத்திரங்கள் நல்ல கற்பனை

 இறுதிக் காட்சியில் அவர் மீளும் நொடிகள் சரியாக சொல்லப்படவில்லை அதுவே இந்த படத்தின் வீக்னஸ்

சூவலைலநம்மிடம் பெரிய உணர்ச்சிகளை ஏற்படுத்தாமல் போகிறது. ஐஷ்வர்யா லக்ஷ்மி சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.


---உமாதமிழ்




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி