நல்ல பேச்சாளனுக்கு உரிய அடிப்படை தகுதி 'அவையறிதல்

 கிருபானந்த வாரியாரிடம் ஓரு நிருபர் கேட்கிறார், எப்படி எந்த தலைப்பு கொடுத்தாலும் பேசுகிறீர்களே என்று ஆச்சரியப்பட்டு கேட்டார். ஓவர் டேங்கை-(மூளை) நிரப்பி விட்டால் சமையலறை, குளியலறை,கழிவறை என எந்த குழாயை திறந்தாலும் தண்ணீர் வருமே என்றார்.


அரசியல் அல்லாத தமிழக வரலாற்றில் தனது மேடைப்பேச்சுத் திறனால் உச்சம் பெற்றவர்கள் கிருபானந்தவாரியார் மற்றும் கி.வா.ஜகந்நாதன்.
இராவண காவியம், சிலப்பதிகாரம் எனத் தொடர்ந்து உரையாற்ற சிலம்பொலி செல்லப்பன் அவரால் மட்டுமே முடியும்.
இப்போதைய இளைய தலைமுறைகளையும் கவரும் வகையில் பேசக்கூடிய ஆற்றல் உடையவர் சுகி.சிவம்.
ஆழமான கல்வியே மேடை அச்சத்தை போக்கும். உணர்ச்சி மிக்க சொற்களால், நகைச்சுவையுடன் பேசினால் கேட்பவர் கவனத்தை ஈர்த்து விடும்.
மேடையேறிப் பேசுபவர்கள் தனக்கு முன்னால் இருக்கும் மக்கள் அறிவாளிகள் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு பேச பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும், மேடைப்பேச்சுக்கு அடிப்படை, தகவல்களைத் தெரிந்து தன்னை அப்டேட்டாக வைத்திருப்பது.
அன்றாடம் வருகின்ற செய்தித்தாள்களின் தலையங்கங்களை, நடுப்பக்கக் கட்டுரைகளைப் படித்து நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும் இணையம், தொலைக்காட்சி, திரைப்படங்கள், யூடியூப் வீடியோக்கள் எனப் பலவற்றையும் கவனித்தால் மேடைப்பேச்சில் சுவாரஸ்யம் கூடும்.
சர்ச்சிலிடம் ;
நீங்கள் ஐந்து நிமிடங்கள் பேச எவ்வளவு நேரம் உழைப்பீர்கள்
ஐந்து நாட்கள்...
பத்து நிமிடம் பேச ;
ஒரு நாள்...
ஒரு மணி நேரம் பேச;
இப்போதே பேச தயார்,நேரம் தேவையில்லை .
ஒரு தலைப்பின் சார்புத்தன்மை, எதிர்த்தன்மை இரண்டையுமே அலச வேண்டியது ஒரு பேச்சாளருக்கு மிகவும் அவசியம்.
தொடக்க நிலைப் பேச்சாளர்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடியில் பார்த்துப் பேசப்பழகலாம்.
ரெங்கா சார் மாதிரி ஜூஸ் பிழிந்து சர்க்கரை போட்டு ஐஸ் போட்டு ஸ்ட்ராவும் டம்ளர் விளிம்பில் அலங்காரத்திற்கு பாதி எலுமிச்சையம் செருகி கொடுக்க வேண்டும்.(ஜூஸ் மட்டும்) பழம், சர்க்கரை, ஐஸ் எல்லாத்தையும் அப்படியே கொடுக்க கூடாது,
அதாவது தட்டில் கேசரியை சுடச்சுட வைத்து ஸ்பூனை செருகி, ரவை,சர்க்கரை, முந்திரி என தனித்தனியே இல்லை.
கூட்டத்தினரின் மனநிலை, நேரத்தின் அருமை இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்புகளை வைத்து பேச வேண்டுமே தவிர பெரிய புத்தகங்களை எடுத்து சென்று, மேடையில் புரட்டி பார்த்து பேச கூடாது.
அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு . ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார் . " காலமோ சித்திரை ... நேரமோ பத்தரை ... உங்களுக்கோ நித்திரை ... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை " என்பதே அந்தப் பேச்சு !
நல்ல பேச்சாளனுக்கு உரிய அடிப்படை தகுதி 'அவையறிதல்' என்பது.
உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நுாறு பேரில் ஒருவருக்கு வாய்க்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய் திகழ்வர். ஆனால், பேச்சாளராக இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பது அவ்வையாரின் கருத்து.
கேட்கின்றவர்களுக்கு ஏற்ப பேசவதுதான் பேசும் திறன். பிறரை காயப்படுத்தாமல் பேசுவது அரிய கலை. இடைவிடாத முயற்சி, விடாத வாசிப்பு கற்றறிந்தோர் தொடர்பு ஆகியவை எப்போதும் சிந்தையில் இருந்தால் பேச்சாளராகலாம். வெற்றியும் பெறலாம்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,