பலாக்காய் நன்மைகள்.

 பலாக்காய் நன்மைகள்.

முக்கனிகளின் முக்கியமான பலாவின் சுவை அனைவருக்கும் தெரியும். ஆனால், பலா, பழுக்காமல் காயாக இருக்கும் போது சமைத்து சாப்பிட்டால், அதில் இருக்கும் நன்மைகள் பலருக்கு தெரியாது.அதேபோல், பலாப்பழத்தின் உள்ளிருக்கும் பலாக்காய் கொட்டையும் சமையலுக்கு மிகவும் உதவுவது. பலாக்கொட்டையில் மாவுச்சத்து அதிகம் உள்ளது.


பலாக் கொட்டை மிகவும் சுவையாக இருக்கும். பலாக்கொட்டையை, கூட்டு, பொரியல் செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பலாக்காய் பச்சடியும் பிரபலமானது.


பலாக்காயை காயாக சமைத்து உணவில் சேர்த்துக் கொள்வதினால் உடலில் புதிய ரத்தம் உற்பத்தி (Nutritious Food) ஆகிறது. பலா உடலின் வலிமையை அதிகரிக்கிறது.


ஆண்களின் தாதுவஒ விருத்தியடையச் செய்யும் குணம் பலாவுக்கு உண்டு. பலாக்காய் செரிமாணம் ஆக நீண்ட நேரம் ஆகும் என்பதால், இஞ்சி, மிளகு, மிளகாய், சீரகம் சேர்த்துச் சமைத்து சாப்பிட்ட வேண்டும்.பலாக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மூல நோயை தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பலாப்பழம் முக்கனிகளின் ஒன்று என்றால் அது காயாக இருக்கும்போதும் பலனைக் கொடுக்கிறது.


அதுமட்டுமல்ல, பலாக்காயை காயவைத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் மாவு, மருத்துவ குணங்கள் உடையது.


தினசரி உணவில் பச்சை பலாப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தேக்கரண்டி மாவை கலந்து உணவு தயாரித்து சாப்பிட்டால் (Nutritious Food) இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு பிளாஸ்மா குளுக்கோஸ் அளவு குறையும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.


பலாப்பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கின்றது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ உயிர் சத்து, தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. எனவே பலாப்பழத்தை காயாகவோ பழமாகவோ தொடர்ந்து பயன்படுத்தினால் உடலில் தொற்று நோய்


வைட்டமின் 'சி' (Vitamin C) அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆக செயலாற்றுகிறது பலா. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.பலாப்பழத்திலுள்ள விட்டமின் 'ஏ' சத்து, கண்களுக்கு நல்லது. மாலைக்கண் நோயை குணமாக்கும். பலாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் வராது என்றும் கூறப்படுகிரது..


நார்ச்சத்து அதிகம் இருக்கும் பலா, அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மைக் கொண்டது. பலாவில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது என்பது பலாவின் கூடுதல் சிறப்பு.


கார்போஹைட்ரெட், பொட்டாசியம், கால்சியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் பலா, புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையை கொண்டிருக்கிறது.


எனவே, பலாவை, பழமாக மட்டுமல்லாமல், காயாகவும் பயன்படுத்தி, ஆரோக்கியத்திற்கான அடித்தளத்தை அமைக்கலாம்.பகிர்வு

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,