தந்தையின் அன்பு உயிரானது

 தாயின் அன்பு உண்மையானது என்றால் தந்தையின் அன்பு உயிரானது. அன்பு மகளின் தலையை தோள்பட்டையில் சுமக்கும் ஆனந்தம் தந்தை ஆனவர்கள் மட்டுமே அனுபவிக்கும் பரம சுகம். ஒரு தந்தை என்பவர் ஒரு காவலர், ஓர் ஆசான், ஒரு நண்பர் என்ற பசப்பிணைப்பை இந்தப் புகைப்படம் பேசுகிறது 💝

எனது அருமை தோழி; 

இனிய சகோதரி திவ்யா சத்யராஜ்....அழகும் அறிவும் நிறைந்த மூன்றெழுத்து மந்திரம். அப்பா "புரட்சித் தமிழன்" சத்யராஜுடன் சிறந்த பாசப் பிணைப்பைக் கொண்டுள்ளவர். அவர்களின் உறவு தந்தை மகள் உறவை தாண்டி ஓர் அழகான நட்பைப் போன்றது. 



சகோதரி திவ்யா, தமிழகத்தின் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கான வெற்றிப் பாதையை உருவாக்கித் தந்திருக்கிறார் புகழ்பெற்ற நடிகரான இவரது தந்தை சத்யராஜ். திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தன் கனவுகளை மெய்ப்படுத்துவதில் தனது தந்தையின் அளவற்ற ஆதரவை மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார். 


நடிகர் சத்யராஜ் தனது மகளின் தொழில் மற்றும் எதிர்காலத்தில் முழு சுதந்திரம் அளித்துள்ளார். இவர்கள் இருவரும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்; அவ்வண்ணமே தங்கள் வாழ்க்கைப் பயணத்தையும் மேற்கொள்பவர்கள். தந்தை என்பவர் தம் மகள் வாழ்க்கையில் ஒரு பொசிட்டிவ் நிழலாக இருக்கும்போது, ​​​​அந்த மகள் தனக்குள் இருக்கிற திறமைகளை அறிந்து ஓர் ஆரோக்கியமான உணர்வோடு வளர்கிறார். இவர்களே அதிக நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும் இருந்து, வாழ்க்கையில் அவர்கள் விரும்புவதைப் பற்றிய தெளிவான புரிதலையும் கொண்டுள்ளார்கள். இந்தத் தத்துவத்தை நன்குணர்ந்தவர் நடிகர் சத்தியராஜ். அதனால் தான் திவ்யா எனும்  தனது அறிவு மங்கையை தமிழகத்தின் திருமகள் போல் வளர்த்திருக்கிறார்.


வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலும் பெண்ணாக இருந்தாலும் பெண்ணை அடிமைப்படுத்தி வீட்டுக்குள் பூட்டி வைத்த இந்தியக் கலாசாரம் கொடுமையானது. அந்தக் களங்கத்தைப் போக்க களம் இறங்கியவர்  தான் தந்தை பெரியார் எனும் பகுத்தறிவு சிந்தனையாளர். இந்த இழிவை உடைக்க வந்த பெரியார், ஆணும் பெண்ணும்  இங்கு சமம் என்று நமக்குக் கற்பித்தார். “மகள் என்ன படிக்க வேண்டும், எப்படி உடுத்த வேண்டும், எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் "ஹிட்லர்" போல் ஒரு தந்தை இருக்கக் கூடாது. மகள்களின் கனவை நனவாக்கும் ஒரு பாலமாக தந்தை என்பவர் இருக்க வேண்டும்” எனும் பகுத்தறிவுப் பகலவனின் கருத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு நடிகர் சத்யராஜ். தனது மகள் திவ்யா விரைவில் அரசியலுக்கு வரும் திட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து வருகிறார். 






நடிகர் சத்யராஜ் - திவ்யா இருவரும் மற்ற அப்பா-மகள்களுக்கு ஒரு நல்ல உதாரணமாகத் திகழ்கிறார்கள். இந்த அழகான அப்பா-மகள் உறவு நமக்கொரு அழகான பாடத்தைக் கற்றுத் தருகிறது.


1. உங்கள் குழந்தைக்கு நேரம் ஒதுக்குவதும், வலுவான உறவை உருவாக்குவதும் காலப்போக்கில் அவர்களைச் சிறப்பாக செயல்படச் செய்யும். 


2. அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலமும், அவர்களின் ஆர்வங்கள் மற்றும் இலக்குகளை ஆதரிப்பதன் மூலமும், அவர்கள் முக்கியம் வாய்ந்தவர்கள், அன்புக்குரியவர்கள், இரக்கம் மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள் என்று அவர்களுக்குக் காட்டுகிறீர்கள். 


3. மேலும் ஒரு வலுவான பிணைப்பை வளர்த்து, வாழ்க்கை பயணத்தில் வானவில் போன்று வர்ணம் நிறைந்த நினைவுகளை உருவாக்குகிறீர்கள்.


அன்பு தோழி திவ்யா அவர்களுக்கு, 

குணம் உள்ளவர் கோபுரம் போல!

பணம் உள்ளவர் கலசம் போல!

கோபுரம் மீது கலசம் இருக்கும்!

ஆனால் 

கலசங்கள் மாற்றப்படலாம்!

கோபுரங்கள் என்றும் மாற்றப்படுவதில்லை!

குணமே என்றும் நிலைத்திருக்கும் .

மேன்மையான நற்குணங்களால் உருவான உங்கள் கனவுகள் அனைத்தும் மெய்யாகி உங்கள் தந்தையைப் போல் உங்கள் பேரும் புகழும் ஓங்கி வளரட்டும். கொள்கையில் பெரியாரின் தொண்டனாகவும், நல்லறிவுரை கூறுவதில் குருவாகவும், பாதுகாப்பதில்  "கட்டப்பா" போல் வாழும்  உங்கள் தந்தை சத்யராஜ் அவர்களின் ஆசிர்வாதங்கள் உங்களை என்றும் வழிநடத்தட்டும் 




என்றும் சத்யராஜ் Uncle அவர்களின் குடும்ப அன்பில் 💞



ராஜ் குமார் மலேசியா


P/s : புகைப்படத்தைப் பகிர்ந்த திரு.பாலா அவர்களுக்கு நன்றி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,