ஹர் கோவிந்த் குரானா

 ஹர் கோவிந்த் குரானா பிறந்த தினமின்று



.

💐
🏆 மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான குரானா 1922ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் ராய்ப்பூர் கிராமத்தில் பிறந்தார்.
🏆 இவர் 1959ஆம் ஆண்டு மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத இணைநொதி-ஏ (Coenzymey-y) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார். இது தொடர்பான ஆய்வு மூலம் மரபுவழியிலான சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது.
🏆 இந்த ஆய்வுக்காக 1968ஆம் ஆண்டு இவருக்கும் நிரென்பர்க், ஹாலி ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. மேலும் மரபுக்குறியீடு (Generic Coad) எஸ்கிரிஷியா கோலி (Escherichia Coad) என்னும் நுண்ணுயிரிகளின் மரபணு உருவாக்கம் போன்ற ஆய்வுகளில் இவருடைய குழுவினரும் ஈடுபட்டனர்.
🏆 அதன்பின் இந்த நுண்ணுயிரியின், சுமார் 207 மரபணுக்களை இவர்கள் செயற்கையாக உருவாக்கினர். புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதிலும் இவர் மகத்தான பங்காற்றியுள்ளார்.
🏆 முதன்முறையாக செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்த அறிவியல் மேதை ஹர் கோவிந்த் குரானா 2011ஆம் ஆண்டு மறைந்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,