அறிகுறி இல்லாமல் வரும் ஆபத்தான பக்கவாத நோய்.

 அறிகுறி இல்லாமல் வரும் ஆபத்தான பக்கவாத நோய்.

''மனிதனுக்கு உண்டாகும்‌ நோய்களில்‌ ஆபத்தானது பக்கவாதம்‌. ரத்த நாளங்களில்‌ அடைப்பு உண்டாகி , மூளையின் ‌ பாகங்கள் ‌ செயல் ‌ இழப்பதைத் தான் ‌ பக்கவாதம் ‌ என்கிறார்கள்.எந்தவித முன்‌ அறிகுறியும்‌ இல்லாமல்‌ வரக்கூடிய ஆபத்தான நோய்‌ இது. அதனால்தான்‌ இதை ஆங்கிலத்தில்‌ ஸ்ட்ரோக்‌ என்பார்கள்‌. மூளைக்கு செல்லும்‌ ரத்த ஓட்டத்‌ தடை, ரத்தக்‌ கசிவு போன்ற காரணங்களால்‌ பக்கவாதம்‌ ஏற்படுகிறது. இதனால்‌ உடலின்‌ பாகங்கள்‌ செயல்பாட்டை இழந்து அசைவின்றிப் போய்விடுகிறது.


அதிக அளவு ரத்த அழுத்தம்‌, தேவையற்ற கொழுப்புப் பொருள்கள்‌ உடலில்‌ தேங்குவது போன்றவைதான்‌ பக்கவாதம்‌ வரத் துணை புரிகிறது. மரபு ரீதியாகக் கூட இந்த பக்கவாதநோய்‌ அதிகம்‌ உண்டாகிறது என்கிறார்கள்‌. ஒவ்வொரு ஆறு விநாடிக்கும்‌ ஒருவரைத்தாக்கும்‌ இந்த நோய்‌ ஆண்டுக்குசுமார்‌ ஆறு கோடி பேரைபாதிக்கிறதாம்‌. அதில்‌ ஒன்றரை கோடிபேர்‌ மரணமும்‌ அனடைந்துவிடுகிறார்களாம்‌.


நம்‌ நாட்டைப்‌ பொறுத்தவரை, ஆண்டுக்கு 6 லட்சம்‌ பேர்‌ வரைபக்கவாத நோயால்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌. அதில்‌ ஒன்றரைலட்சம்‌ பேர்‌ வரை பலியாகிறார்கள்‌ என்கிறது மருத்துவ உலகம்‌.


தலைவலி, பார்வை மங்குதல்‌, திடீர்‌ மயக்கம்‌, கை, கால்களில்‌ தளர்ச்சி, உணர்ச்சிக்‌ குறைவு, மரத்துப்‌ போதல்‌, பேச்சுக்குழறல்‌ போன்றவை இந்த நோய்‌ தாக்குவதைக்‌ காட்டும்‌ உடனடி அறிகுறியாகும்‌. ரத்தஅழுத்தத்தைச் சீராக வைத்தல்‌, உடற்பயிற்சி, சீரான உணவு, சந்தோஷமான சூழல்‌, புகை, மது ஒழித்தல்‌ போன்றவைஇந்த நோயை வரவிடாமல்‌ பாதுகாக்கும்‌. மேலும்‌, இதய நாள நோய்‌, சர்க்கரைக் குறைபாடு கொண்டவர்களைப்‌ பக்கவாதம்‌ தாக்கும்‌ ஆபத்து அதிகம்‌. எனவே, இவர்கள்‌ ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்‌.


ஆண்டுக்குஆண்டு பக்கவாத நோயாளிகளின்‌ எண்ணிக்கைகூடிக்கொண்டே போகிறது.
பகிர்வு


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,