பாத்திமா ஷேக் பிறந்த தினமின்று!

 கூகுள் டூடுள் கெளரவப்படுத்தி இருக்கும் பாத்திமா ஷேக் பிறந்த தினமின்று!
💐


இந்தியாவில் முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பெண்களுக்கான கல்விநிலையம் தொடங்கியவரிவர். இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியர்.
இந்தியாவின் தலித் கல்விக்கு முதல்படி எடுத்து வைத்த பாத்திமா தமது நண்பர்களான ஜோதிராவ் புலே மற்றும் அவரது மனைவி சாவித்திரிபாய் புலே ஆகியோருடன் இணைந்து தலித் கல்விக்கு வித்திட்டவர். பாத்திமா-சாவித்ரி இணைந்து தொடங்கிய அவர்களது பள்ளியில் பணியாற்றிய போது தொடர்ந்து உயர்சாதி வகுப்பினரால் மிரட்டப்பட்டும் ஊர்நீக்கம் செய்யப்பட்டும் துணைக்கு ஆளில்லாமல் ஊரைவிட்டு விரட்டப்பட்டனர் , விரட்டப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு தங்கள் வீட்டின் ஒரு பகுதியையே பள்ளி ஒன்றினை துவங்க இடமாகவும் தந்து பாடமும் கற்பித்தனர்.
சாதிக்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த பாத்திமா ஷேக் இந்திய வரலாற்றில் இருந்து முற்றிலுமாக மறைக்கப்பட்டுள்ளார். சுதந்திரம் அடையாத இந்தியாவில் 150 வருடங்களுக்கு முன்பாகவே பெண்ணியத்திற்கு வித்திட்ட ஷேக் பாத்திமா தலித் பெண்கள் பயிலுவதற்கான பழங்குடி நூலகம் எனும் தனி நூலகத்தை தொடங்கி நடத்தியவர். ஒரே நேரத்தில் ஜோதிபா பூலே தொடங்கிய ஐந்து பள்ளிகளிலும் பணியாற்றிய தன்னிலமில்லா ஆசிரியை , 1856 க்கு பிறகு அவர் என்னவானார் என்றே யாருக்கும் தெரியவில்லை
சாவித்ரி பூலே - ஜோதிராவ் பூலே ஆகியோருக்கு கிடைத்த அதேயளவு மதிப்பும் மரியாதையும் கிடைக்கப்பெற வேண்டிய இந்த - சகோதரியின் பிறந்த தினத்திஅ நினைவூட்டிய கூகுளுக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,