10 நிமிடத்தில் மீதமான சாதத்தில் சூப்பரான சாஃப்டான பஞ்சு போல இடியாப்பம்
10 நிமிடத்தில் மீதமான சாதத்தில் சூப்பரான சாஃப்டான பஞ்சு போல இடியாப்பம்
மீதமான சாதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா. பழைய சாதத்தை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தைகள் யாருமே விரும்பி சாப்பிட மாட்டார்கள். நம்முடைய அம்மா பாட்டி இவர்கள் இந்த பழைய சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து பழையதாக சாப்பிடுவார்கள். அது உடலுக்கு ரொம்பவும் ஆரோக்கியம் தான். ஆனால், இப்போது அதுவும் உடல்நிலைக்கு ஒத்து வருவது கிடையாது. சில பேர் இதை புளி சாதகமாக செய்து சாப்பிடுவார்கள்.
. அந்த சாதத்தை கொஞ்சம் வித்தியாசமாக மாற்றி, இப்படி இடியாப்பம் செய்து கொடுத்து பாருங்கள். இடியாப்ப மாவில், இடியாப்பம் செய்தால் கூட இவ்வளவு சுவையாக கிடைக்காது.
மீதமான சாதத்தில் இடியாப்பம் செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.
முதலில் 1 கப் அளவு பழைய சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது காலையில் வைத்த சாதம் மிஞ்சி இருந்தால், இரவு நேரத்தில் இப்படி இடியாப்பம் செய்யலாம். இரவு வடித்த சாதம் மிஞ்சி இருந்தால் அதை காலையில் இடியாப்பமாக மாற்றிக் கொள்ளலாம். 1 கப் அளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு, உப்பு போட்டு முதலில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த சாதத்தோடு 2 ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு முறை அரைக்க வேண்டும். சாதம் நன்றாக நைசாக அறிய வேண்டும். ஒரு பருக்கை சாதம் கூட அதில் தெரியக்கூடாது. (நீங்கள் உப்பு சேர்த்து சாதம் வடிப்பீர்கள் என்றால் அதற்கு தகுந்தது போல உப்பு சேர்க்க வேண்டும்.)
மிக்ஸி ஜாரில் அரைத்த இந்த சாத விழுதை அப்படியே ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள். 1 கப் அளவு சாதம் எடுத்தீர்கள் அல்லவா. அதே அளவு 1 கப், பச்சரிசி மாவை எடுத்து, அரைத்த சாதத்தோடு சேர்த்து பிசைய வேண்டும். ஆரம்பத்தில் இது கொஞ்சம் கையில் பிசு பிசு வென ஒட்டத் தான் செய்யும். பரவாயில்லை, மாவு ரொம்பவும் தண்ணீராக இருக்கும் பட்சத்தில் மீண்டும் இன்னும் கொஞ்சம் பச்சரிசி மாவை சேர்த்து மாவை பிசைந்து சப்பாத்தி மாவு போல தயார் செய்து கொள்ள வேண்டும்.
சப்பாத்தி மாவு போல மாவு கெட்டியாக இருக்கக் கூடாது. அந்த பக்குவத்தில் மாவை பிசைந்து எடுக்க வேண்டும். ஆனால் மாவை தொட்டு பார்க்கும் போது நமக்கு சாஃப்ட் ஆக இருக்க வேண்டும். இதை அப்படியே சிறிய சிறிய பாகங்களாக எடுத்து நீளவாக்கில் உருட்டி, இடியாப்ப அச்சில் போட்டு கொள்ளுங்கள்.
உங்களுடைய வீட்டில் இடியாப்ப தட்டு இருந்தால் அதில் எண்ணெய் தடவி விட்டு, அதன் பின்பு இடியாப்பத்தை பிழிந்து கொள்ளுங்கள். இடியாப்ப தட்டு இல்லாதவர்கள் இட்லி தட்டிலேயே இடியாப்பத்தை பிழிந்து ஆவியில் வைத்து 5 நிமிடங்கள் போல வேக வைத்து எடுத்தால் போதும். சூப்பரான சாஃப்ட்டான இடியாப்பம் தயார் ஆகி இருக்கும். இந்த இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் பால் வைத்துக்கொள்ளலாம். குருமா வைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வெறும் தேங்காய் துருவல் சர்க்கரையை இதன் மேலே தூவி கூட சாப்பிடலாம். அவ்வளவு அருமையாக இருக்கும்.
thanks
https://dheivegam.com/meedhamana-sadam-idiyappam/
Comments