போலியோ சொட்டு மருந்து முகாம் 2022/#பீப்பிள் டுடே செய்தி
 நாட்டில் போலியோ நோயை முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் பலனாக இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடுதலாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று தொடங்கியது.  காலை 7 மணிக்கு தொடங்கிய சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதற்காக  43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.


இந்த மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காய்ச்சல், இருமல் மற்றும் கோவிட் தொற்று இருந்தால் மையங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதன்படி, சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் மருத்துவ துறை சார்பில் அமைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை பங்கேற்றார்.  இதன்பின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்துள்ளார்.இதில், 5 வயகுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி அவர்களுக்கு பொம்மை உள்ளிட்ட பரிசுகளையும் வழங்கினார்.  உடல்நலம் பாதித்த குழந்தைகள் அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து எடுத்து கொள்ளலாம்.  சொட்டு மருந்து தரப்படும் குழந்தைகளுக்கு கை விரலில் மை வைக்கப்படும்.  சொட்டு மருந்து வழங்கும் பணியில் 2 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 சென்னை கொளத்துரில் உள்ள எவர் வின் மெட்ரிகுலேஷன் higher செகண்டரி பள்ளியில் இன்று 27.2.2022 ஒரு பெரிய மெகா கேம்ப் நடத்த பட்டு வருகிறது 55000 குழந்தைகளுக்கு போலியா சொட்டு மருந்து வழங்கபடும் என தெரிவிக்க பட்டுள்ளது

அனைத்து குழந்தைகளுக்கும் கிப்ட் வழ ங்கப்பட்டு வருகிறது

பெற்றோர்களும் குழந்தைகளும் மிகவும் உற்சா கத் துடன் பங்கு கொண்டு வருகிறார்கள்

,இந்த நிகழ்வு பற்றிய ஒரு காணொளி#பீப்பிள் டுடே செய்திComments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,