அது ஒரு வித்தை!
#காதல்மாதம்
#பிப்ரவரி
அது ஒரு வித்தை!
நித்திரை தொலைத்த இரவுகளில்
நட்சத்திர விசாரிப்புகள்
நடத்திக்காட்டும்
விந்தை சூத்திரம் பழக
ஆதிசூத்திரம் காதல்
அவசியம்
ஒற்றெழுத்தின் புள்ளியாகும்
நட்சத்திரங்களுக்கு இடையில்
குறிலும் நெடிலுமான
உயிரும் மெய்யுமான
உறவான உன்
எழுத்துகள் கூட்டி
முழுநிலவின் முற்றுப்புள்ளியோடான
எனக்கான செய்திகள்...!
மகிழ்கிறேன்!!
பதிலை
இராக்கோழிகள் தூதாடும்!
##மஞ்சுளாயுகேஷ்
Comments