தமிழ் சினிமாவிற்கு கிடைத்த 5 பொக்கிஷமான நடிகர்கள்..

 தமிழ் சினிமாவிற்கு கிடைத்த 5 பொக்கிஷமான நடிகர்கள்.. 



தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்கள் தங்களுடைய அசாத்தியமான நடிப்பால் இன்னும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். தற்போதும் நாம் பழைய படங்கள் பார்த்தால் நம்மை வியப்பில் ஆழ்த்தி இருப்பார்கள். அவ்வாறு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்களான நடிகர்களை பார்க்கலாம்

T.S பாலையா : தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தலைச்சிறந்த நடிகராக திகழ்ந்தவர் டி எஸ் பாலையா. இவர் கதாநாயகன் வில்லன், நகைச்சுவை, நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் பாலையா நல்ல குரல்வளம் உடையவர். அவருடைய பல படங்களில் பாலையா தன் சொந்தக் குரலிலேயே பாடியுள்ளார்.

Balaiah-T.S-

S.V சுப்பையா : சுப்பையா பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். காலம் மாறி போச்சு திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அம்பாள் புரொடசன் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார்.

S.v-Subbiah

S.V. ரங்காராவ்: ரங்காராவ் தன் 25 வருட திரைவாழ்க்கையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் 163 படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பாதாளபைரவி படத்தில் மந்திரவாதியாக ரங்காராவ் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு மிகப் பெரிய புகழை வாங்கி தந்தது. இந்தியா அரசு எஸ்வி ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது அஞ்சல் தலையை 2013இல் வெளியிட்டது.

V.Rangarao

M.R ராதா : தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் எம் ஆர் ராதா. இவர் நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. எம் ஆர் ராதா 125 திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார்.

M.r-ratha

V. நாகையா: தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் சித்தூர் வி நாகையா. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கலைமாமணி விருதும், பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,