60 வயது கூலித் தொழிலாளி ஒருவர் விளம்பர மாடலாக
கேரளத்தில் 60 வயது கூலித் தொழிலாளி ஒருவர் விளம்பர மாடலாக மாறியுள்ள நிகழ்வு பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
ஷரிக் வயாலில் என்ற புகைப்படக் கலைஞர், கூலித் தொழிலாளியை மாடலாக மாற்றி எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கூலித்தொழில் செய்து வருபவர் மம்மிக்கா. 60 வயதான இவர் லுங்கி, சட்டை அணிந்து சாதாரண மனிதராக வலம் வந்துகொண்டிருந்தார்.
தினக் கூலிக்காக அன்றாடம் பணிக்குச் செல்வது மட்டுமே அவரது பணியாக இருந்து வந்த நிலையில், இவரைக் கண்ட ஷரிக் வயாலில் என்ற புகைப்படக் கலைஞர் அவரை புகைப்படம் எடுக்க அணுகியுள்ளார்.
அவருடைய சாதாரண உடைகளுக்கு பதில், நேர்த்தியான உடையை உடுத்த வைத்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனைத் தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பகிந்துள்ளார்.
நன்றி: தினமணி
Comments