செல்வம் தரும் சிவ பெயர்ச்சி*!

 * இன்று(7-2-2022) செல்வம் தரும் சிவ பெயர்ச்சி*!



சனிப்பெயர்ச்சி ,குரு பெயர்ச்சி , ராகு கேது பெயர்ச்சி கேள்விபட்டிருப்பீர்கள்!


சிவ பெயர்ச்சி கேள்வி பட்டுள்ளீர்களா?


ஆம் சிவன் ஆலகால விஷத்தை உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உண்டாகியது


ருத்ர மூர்த்தியாக சிவன் கோபம் கொண்டு ஆடியதை கண்ட பார்வதி மனமுருகி ஸ்வாமியை வேண்டி கோபத்தை குறைத்து சாந்த ஸ்வரூபனாக பகவான் சகல உயிர்களையும் காக்க வேண்டும் என வேண்டினாள்


பகவான் அம்பாளின் வேண்டுதலை ஏற்று கோபமார 


ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினமே "சிவப்பெயர்ச்சி"


ஒவ்வொரு வருடமும் தை மாதம் கடைசி திங்கட்கிழமை நாளில் வருவதே இந்த சிவப்பெயர்ச்சி!


இந்த சிவப்பெயர்ச்சி தினத்தில் பகவானின் அருள் என்பது மிகப்பெரிய தடைகளை விலக்கும்


இன்றைய கலியுகத்தில் கடன் வியாபாரம் என பல வித மன அழுத்தத்தால் மனித குலம் அதீத கோபத்திற்கு ஆளாகிறது.


அப்படிபட்ட கோபத்தை அழித்து சாந்தம் அன்பு கருணை குணம் மாறக்கூடிய தினமே சிவப்பெயர்ச்சி.


ஏழரை சனி  அஷ்டமசனி,ஜென்ம குரு ,ராகு,கேது தீவினைகள் என எல்லாவித கிரக தோஷங்களையும் விலக்கும் ஒரே தினம் தை மாதத்தில் வரும் கடைசி திங்கட்கிழமையே


அனைத்து ராசியினரும் சிவப்பெயர்ச்சி அன்று சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன்,நோய், விலகும் 


சொல் வாக்கு செல்வாக்கு திரும்ப கிடைக்கும். 


மனம் அமைதி பெறும்.கோபம் குறையும் , வீட்டில் அமைதி தங்கும்


இன்று பிப்ரவரி 

7 ம்தேதி 2022 (தை25)தை  மாதத்தில் வரும் கடைசி திங்கட் கிழமையன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்யுங்கள்.


சிவப்பெயர்ச்சிக்கான  

விஷேச ஸ்தலம் எங்கு உள்ளது தெரியுமா?


மயிலாடுதுறை அருகில் உள்ள முட்டம் குளத்தங்கரை கிராமத்தில் உள்ள " ஸ்ரீமஹாபலீஸ்வரர்" 

சிவன் கோவிலே சிவப்பெயர்ச்சிக்கான  

விஷேச ஸ்தலம் ஆகும்.


இது மஹாபலிச்சக்கரவர்த்தி தான் இழந்த செல்வம் புகழ் சொல்வாக்கு என அனைத்தையும் மீட்டெடுத்த தலமாகும்.


பல ஆயிரம் வருட பழமையான சிதிலமடைந்த சிவஸ்தலம்.


பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது.


படித்ததில் பிடித்தவை

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி