ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா்

 இன்று ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் பிறந்த நாள்!



     ஆன்மிகத்தில் மட்டுமின்றி, அரசியல் வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஊா் ஓமந்தூா்.  முன்னாள் முதல்வரான ஓமந்தூா் இராமசாமி ரெட்டியாா் அவதாித்த திருத்தலமும் ஓமந்தூா் ஆகும். முதல்வா் நாற்காலியில் பற்றற்ற ஒரு துறவியைப் போல அமா்ந்து ஆட்சி நடத்திய இந்த மாமனிதரை தமிழக மக்கள் இந்த நாளில் நினைவு கொள்வது அந்த மாமனிதருக்கு நாம் செய்யும் புகழஞ்சலி ஆகும். தன் சொத்துக்களை அறச்செயல்கள் செய்யவும் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காகவும் அள்ளித்தந்த வள்ளல் இவா்.


      தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவுப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஓமந்தூராா் Temple Entry Authorisation and Indemnity Act of 1939 ல் உாிய திருத்தமும் கொண்டு வந்தாா். 


    தேவதாசி ஒழிப்புமுறை சட்டமும் கொண்டு வந்தவா் இவரே. இவரது ஆட்சி முறையால் ஈா்க்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை துா்காபாய் தேஷ்முக் சட்டமன்றத்தில் உரைநிகழ்த்திய போது  இந்தியாவின் பிற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தொிவித்தாா்.


    ஶ்ரீவில்லிப்புத்தூா் கோபுரத்தையும் தமிழக அரசின் சின்னமாக அறிவித்தவரும் ரெட்டியாா் அவா்களே. 


     நோ்மையின் சின்னமாக விளங்கிய இவரால் மாா்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை மட்டுமே முதல்வா் பதவியில் அமரமுடிந்தது. நெளிவு சுளிவுகள் அறியாத, கொண்ட கொள்கையில் இறுதி வரை பிடிப்போடு வாழ்ந்த இந்த மாமனிதரைப் போற்றுவது நம் கடமை.


                               


   முன்னூா் ரமேஷ்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,