என் வானத்தின் நிழலில்/சகுந்தலா ஸ்ரீனிவாசன்
என் வானத்தின் நிழலில்
நின் ஞாபகங்களை
உலர்த்திக்கொண்டிருக்கிறேன்..
பெருவெளியெங்கும்
உன் சுவாசக்கூடுகளை
ஒன்றிணைத்து நமக்காயொரு
நதி செய்கிறேன்
படகெங்கிலும் நட்சத்திரங்களை
பிடித்து வருகிறேன்..
இந்த இரவின் மின்மினிப்பூச்சிகளிடம்
ஒரு ரகசியம் சொல்லி வைத்திருக்கிறேன்
நீ தரும் முத்தத்தின் சப்தத்தில்
ஔிரப்போவது நட்சத்திரங்களோ
மின்மினிகளோ அல்ல
என் கன்னமும் காதலும் தான்...
சகுந்தலா ஸ்ரீனிவாசன்

Comments