விவாகரத்து வழக்கில் எதுவெல்லாம் மற்ற துணைக்கு செய்யப்படும் கொடுமை

 வழக்கில் கண்ட கணவன், மனைவி இருவருக்கும் 2000 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்தனர். பின்னர் சில நாட்களில் அவர்கள் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். அவர்களுக்கு 2001 ஆம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது.


திருமண நாளிலிருந்தே மனைவி சாதாரண மனநிலை உள்ளவராக இல்லை. எதற்கெடுத்தாலும் கணவருடன் சண்டையிட்டு வந்தார். தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். மேலும் கணவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் கூறி மிரட்டி வந்தார்.


கணவர் குழந்தையின் நலன் கருதி அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். இருப்பினும் மனைவி தனது குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து சண்டையிட்டு கணவரை மன ரீதியாக கொடுமைப்படுத்தி வந்தார்.


உச்சகட்டமாக ஒருநாள் மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் குதித்தார். அது கணவரை மிரட்டுவதற்காக என்று கணவர் கூறினார். இதுகுறித்து கணவர் உடனே தனது மாமியாருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். மேலும் காவல்துறைக்கு தெரியப்படுத்தினார்.


இறுதியில் மனைவியின் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் விவாகரத்து கேட்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி கணவரின் வழக்கை ஏற்று #விவாகரத்து (#divorce ) வழங்கி உத்தரவிட்டார்.



மனைவி அதனை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிபதி மனைவியின் மனுவை ஏற்று கீழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.


அதனை எதிர்த்து கணவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.


வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் விவாகரத்து வழக்கில் எதுவெல்லாம் மற்ற துணைக்கு செய்யப்படும் கொடுமையாக கருதப்படும் என்று விளக்கம் அளித்தது.


1. தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வருவதோடு, தற்கொலை செய்து கொள்வதற்காக முயற்சி செய்வது,


2. கணவர் / மனைவியிடம் சண்டையிட்டு அவருக்கு காயத்தை ஏற்படுத்துவது


3. கன்னத்தில் அறைவது / அடிப்பது


4. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டு விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்குவது


5. வீட்டு வேலைகளை செய்யாமல் இருப்பதோடு, உணவளிக்க மறுப்பது


6. குழந்தைகளை முறையாக கவனிக்காமல் இருப்பது


7. பெற்றோரிடம் அவமரியாதையாக நடந்து கொள்வது


8. பெற்றோரை விட்டுட்டு தனிக் குடித்தனம் வர வேண்டும் என்று வற்புறுத்துவது.


9. வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு ஓனரிடம் சண்டையிட்டு, வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தகராறு செய்வது


10. தொடர்ந்து மெண்டல் மாதிரி நடந்து கொண்டு, மன உளைச்சலை ஏற்படுத்துவது


11. எப்போதும் சண்டையிட்டு திட்டுவது


12. எப்போதும் வீட்டை நிம்மதியில்லாத சூழ்நிலையில் வைப்பது


போன்றவை ஒருவர் மற்றொரு துணைக்கு ஏற்படுத்தும் கொடுமைகளாகும். இதில் ஏதாவது ஒரு செயலில் கணவரோ, மனைவியோ ஈடுபட்டு மற்றவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினால் அதை கொடுமையாக கருதி விவாகரத்து வழங்கலாம் என்று நீதிமன்றம் கூறி, இந்த வழக்கில் கண்ட மனைவி கணவருக்கு பல வகைகளிலும் கொடுமை செய்துள்ளதாக கூறி கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.


இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் (#High_court)  20.01.2021 தேதியில் புவனேஸ்வரி Vs ஜெயக்குமார் என்ற வழக்கில் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


#Supreme_Court Court

Civil Appeal No - 8402/2011


Dated - 30.11.2011



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி