வடித்த சாதம் குழைந்துவிட்டதா..? கவலையை விடுங்க

வடித்த சாதம் குழைந்துவிட்டதா..? கவலையை விடுங்க.. அதை வைத்து 5 வகையான டிஷ் செய்யலாம்..!


குழைந்த சாதத்தில் 2 கப் பால் ஊற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தட்டிப் போட்டு கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு சுட சுட கொதிக்க வைத்து குடிக்கலாம்.

தயிர் சாதம் : 1 கப் பால் , தயிர் ஊற்றி கரைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு , கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் , கொத்தமல்லி சேர்த்து தாளித்து தயிரில் கொட்டி கலந்து சாதத்தில் ஊற்றி கிளறுங்கள்.

 ரைஸ் புட்டிங் : குழைந்த சாதத்தில் 2 கப் பால் ஊற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தட்டிப் போட்டு கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு சுட சுட கொதிக்க வைத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் இதில் திராட்

 பகோடா : 3 கப் சாதத்தை கைகளில் பிசைந்துகொண்டு அதோடு கடலை மாவு 2 ஸ்பூன். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி , உப்பு மற்றும் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பின் கடாய் வைத்து எண்ணெய் காய்ந்ததும் பகோடா போல் போட்டு எடுங்கள். அவ்வளவுதான்

: தோசை : 3 பவுல் சாதத்தை குழைய கரைத்து 1 கப் தயிர் , உப்பு 3 ஸ்பூன் எண்ணெய், 2 வெங்காயம் நறுக்கியது என கலந்துகொள்ளுங்கள். நன்குக் கலந்ததும் தோசைக் கல் வைத்து தோசை போல் ஊற்றி சுட்டு எடுக்கலாம்.

: ஊத்தாப்பம் : 2 கப் சாதத்தை நன்கு குழைத்துக்கொள்ளுங்கள். அதோடு 1 கப் தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியான மாவு போல் கலந்துகொள்ளுங்கள். தோசைக் கல் வைத்து எண்ணெய் ஊற்றி, ஊத்தப்பம் போல் மாவை ஊற்றி பிரட்டி எடுத்து சுடுங்கள்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,