கடமை கண்ணியம் கட்டுப்பாடு
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
*
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
*
மறப்போம்; மன்னிப்போம்.
*
கத்தியை தீட்டாதே;
புத்தியைத் தீட்டு.
*
எங்கிருந்தாலும் வாழ்க.
*
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
*
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
*
மாநிலத்தில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி
*
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு .
*
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
*
அன்றாடம் அரசியல் மேடைகளில் புழக்கத்தில் இருக்கும் இவை
போன்ற எண்ணற்ற பிரபலமான வரிகள் அறிஞர் அண்ணாவினுடையதே..
ஜனநாயகத்தின் உயர்ந்த லட்சியங்களை பாமரர்களிடமும் கொண்டு சேர்த்து வளர்த்த பேறிஞர் அண்ணா என்றும் மறையாத
சூரியன்.
அவருடைய நினைவு நாளில் அழியாத
அவரது நினைவைப் போற்றுகிறேன்.
- பிருந்தா சாரதி
*
#Anna #CNAnnadurai #arignaranna
*
Comments