"ஹீரோ" ஸ்டாலின்.. நியூஸ்பேப்பரை திறந்தால்

 

"ஹீரோ" ஸ்டாலின்.. நியூஸ்பேப்பரை திறந்தால்.. இப்படியும் ஒரு முதல்வரா.. மாஸ் காரியம்.



சென்னை:  நேற்று  திமுக அரசு செய்த காரியத்தை பார்த்து, பல்வேறு தரப்பினர் வியந்துபோயுள்ளனர்.. குறிப்பாக திமுக தலைவரை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.. சோஷியல்மீடியா முழுமையிலும் இதே பேச்சாகத்தான் உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்
ராயப்பேட்டை, தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு அதேபோல, தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது... இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு. மா.சுப்ரமணியன் கலந்துக் கொள்ள உள்ளனர்.. இந்நிலையில், நாளிதழ்களில் இன்றைய தினம் திமுக அரசு ஒரு விளம்பரம் தந்துள்ளது.. அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரம் தந்துள்ளது.. அந்த விளம்பரத்தில் உள்ளதாவது:


திமுக அரசு விளம்பரம் "முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 74-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, சீர்மிகு பெருமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள். நாள்:24.2.2022, வியாழக்கிழமை, நேரம்: காலை 10,00 மணி, இயக்குனர், செய்தி - மக்கள் தொடர்புத்துறை சென்னை" என்று அந்த விளம்பரம் வெளியாகி உள்ளது.. ஜெயலலிதாவின் போட்டோவும் அதில் இடம்பெற்றுள்ளது
பிறந்த நாள் அரசு சார்பில் தரப்பட்ட இந்த விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதிமுகவின் மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக அரசு தமிழ் நாளிதழில் இப்படி விளம்பரம் செய்துள்ளதே.. ஆனால், அதிமுக ஆட்சியில் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு இதுபோன்ற விளம்பரங்களை பார்த்ததாக நினைவில்லை. தமிழகத்தின் பெருந்தன்மை கொண்ட தலைவராக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார் என்று ட்விட்டர்வாசிகள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

அணுகுமுறை 
சிலருக்கு ஸ்டாலினின் இந்த அணுகுமுறை புதிதாக இருந்தாலும், இயல்பாகவே மாற்று கட்சியினரை மதிக்கக்கூடிய பண்பு அவரிடம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.. இப்போது சட்டசபையில் அந்த மாண்பை நேரடியாக பலர் பார்க்க நேர்ந்தாலும், இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ஒரு நிகழ்வை குறிப்பிடலாம்.. ஜெயலலிதா இறந்தபோது, திமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டார் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின்.. பிறகு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் ட்வீட்டும் பதிவிட்டிருந்தார்.

ஆனால், சட்டசபையில் இரங்கல் தீர்மானத்தின்போது ஸ்டாலின் பேசிய பேச்சு அனைவரையும் வியக்க வைத்தது.. அதன் சுருக்கம் இதுதான்: 89-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதன்முதலாக அம்மையார் ஜெயலலிதா அவர்களும், நானும் ஒரே நேரத்தில் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தோம்.. அன்றைக்கு நான் ஆளுங்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்தேன்.. அம்மையார் எதிர்கட்சித் தலைவர் வரிசையில் இருந்து பணியாற்றினார்கள். இதை இப்போது எண்ணிப்பார்க்கின்றேன்.
தலைவர் கலைஞர் திமுக சார்பில் 21 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டு, அம்மையாரிடம் நிதியினை அளிக்கச் சென்ற போது தான் முதன் முதலாக அவர்களை நான் நேரில் சந்தித்தேன்... என்னிடம் அவர் "தலைவர் கலைஞர் அவர்கள் எப்படி இருக்கிறார். அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது" என்று விசாரித்தார்.. அதையும் நான் நினைத்து பார்க்கிறேன்.

2016-ம் ஆண்டு அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி பதவியேற்பு நிகழ்ச்சி பல்கலைகழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு எதிர்கட்சியான எங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. நாங்களும் சென்றிருந்தோம். எங்களுக்கு 11-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நாங்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும் கலைந்து சென்றோம். இந்த நிகழ்வைப் பற்றி நான் கூட பெரிதாக நினைக்கவில்லை.
நினைவலைகள் 
ஆனால் சில பத்திரிகைகளில் அது குறித்த செய்தி வந்ததும், அம்மையார் அவர்கள் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதில் ' என்னையோ, தி.மு.க-வையோ அவமதிக்கும் நோக்கத்தில் நாங்கள் செயல்படவில்லை' என்று அதற்காக வருத்தம் தெரிவித்து இருந்தார்.. எங்களைப் பொறுத்தவரை மறைந்த அம்மையாரை பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், எதற்கும் அஞ்சாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதை சந்திக்கக் கூடிய ஆற்றல் பெற்றவராக அவர் விளங்கினார் என்பது உண்மை" என்று ஸ்டாலின் ஜெயலலிதாவின் நினைவலைகளை அன்று புகழ்ந்தார்.
கருணாநிதி 
சட்டசபையில் இப்படி இரங்கல் தீர்மானத்தின்போது பேசுவது வழக்கம் என்றாலும், ஜெ.பற்றிய ஸ்டாலினின் உயர்ந்த மதிப்பீடு அன்றே வெளிப்பட்டது.. அது இன்றும் வெளிப்பட்டுள்ளது.. கருணாநிதியின் மகனுக்கு அரசியல் நாகரீகம் சொல்லி தர வேண்டுமா என்ன?! அதனால்தான் அவர் இந்த தமிழகத்தின் முதல்வராக மக்கள் மனதில் போற்றப்படுகிறார்..
:
நன்றி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,