கே.விஸ்வநாத்

 உங்கள் நடிகர்களை கண்டிப்பாக நடத்தியுதுண்டா?

வீட்டில் நான் கோபப்படுவேன். ஆனால் எனது நடிகர்களைப் பார்த்து சத்தம் போட்டதில்லை. தளத்தில் எனது பொறுமையை கண்டு நானே ஆச்சரியப்பட்டதுண்டு. சுதந்திரமான சூழலில் தான் நடிர்களிடமிருந்து சிறப்பான நடிப்பை பெற முடியும் என எப்போது நினைத்திருந்தேன். இது வேண்டுமென்றே கொண்டு வரப்பட்ட அணுகுமுறை அல்ல. நான் தளத்தில் அனைவரிடமும் இயற்கையாகவே பேசிப் பழகி, ,மென்மையாக நடந்து கொள்வேன். ஒருவேளை எனது குழு, எனது நடிகர்கள் என வந்தால் மென்மையாக நடந்து கொள்கிறேனோ என்னவோ!
சமீப காலங்களில் நடிப்புக்கு வந்துவிட்டீர்கள். இது வேண்டுமென்றே எடுத்த முடிவா?
பாடகர் எஸ்.பி.பி, நடிகர் கமல்ஹாசன் இணைந்து தயாரித்த சுப சங்கல்பம் படத்தின் படப்பிடிப்பில், தற்செயலாக எனது நடிப்பின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. சரியான நடிகர் கிடைக்காத ஒரு கதாபத்திரத்தில் என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தனர். தொடர்ந்து பல நடிப்பு வாய்ப்புகள் வந்தன. சிலசமயம் உதவி செய்யும் பொருட்டும்,

சிலசமயங்களில் என் விருப்பத்துக்கும் ஏற்ப நான் நடித்து வந்தேன்.
நடிப்பு என்பது உங்களுக்கு சம்பளத்துடன் கிடைக்கும் விடுப்பு போல, தொடருங்கள் என கமல் எப்போதும் சொல்வார். இது எனக்கு பிரதானம் கிடையாது. பொழுதுப்போக்கு என சொல்லலாம். ஆனால் இப்போது அதையும் குறைத்துவிட்டேன்.
உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒரு சாதனையாளர். சுயசரிதை எழுதவேண்டும் எனத் தோன்றியதுண்டா?
எனது வாழ்க்கை எளிமையான, சாதாரணமான ஒன்று. ஒரு புத்தகம் விற்க அதில் சாகசம் வேண்டும், நாடகத்தன்மை வேண்டும். இல்லையென்றால அது எப்படி விற்கும்? (சிரிக்கிறார்) பலர் என்னை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்கின்றனர். அவர்களிடம் நான் சொல்வதெல்லாம், எனது படங்களே என் வாழ்க்கை.
எனது தினசரி வாழ்க்கை மற்ற எல்லாரையும் போல் தான் என்றாலும், எனது நம்பிக்கைகளும், சிந்தனைகளும் மாறுபட்டவை. அவை என் திரைப்படங்களில் எதிரொலித்தன. ஒரு நல்ல பார்வையாளர், எனது படங்களைப் பார்த்தால் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
பேட்டி: இயக்குனர் கே.விஸ்வநாத்
நன்றி: இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,