உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமா?
உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமா? அப்போ ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதும்
பொதுவாக தேங்காய் எண்ணெயில் பல பயன்கள் நிறைந்துள்ளது. இதனை நன்கு அறிந்து கொண்ட நமது முன்னோர்கள் சமையல் முதல் தோல் வரை அனைத்திற்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தனர். நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள இந்த தேங்காய் எண்ணெய்யை நாம் தினமும் பயன்படுத்தி வருவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
- காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் குடித்தால் உடல் எடை குறையுமாம். உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்புகளை கரைத்து கல்லீரல் வீக்கம் அடையாமல் தடுக்கின்றது. தினமும் முடிகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வருவதால் வேர்கள் ஊக்கம் பெற்று கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகின்றது.
- தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உடல் சூடாகாமல் எப்பொழுதும் சமமான வெப்ப நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நன்மைகளை தருகின்றது. இதனை அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தலாம்.
- தேங்காய் எண்ணெய்யை தினமும் பற்கள் மற்றும் ஈறுகளில் மசாஜ் செய்தால் பற்கள் பள பளவென்று மின்னும். நாள்தோறும் இரவுகளில் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் முகம் ஜொலிக்கும். அது மட்டும் இல்லாமல் முகத்தில் ஏற்படும் வெடிப்புகள், வறட்சிகள் வராமல் தடுக்க உதவும்.
Comments