இதுதான் ஸ்டாலின் வேகம்"

 

இதுதான் ஸ்டாலின் வேகம்".. ஆந்திரா போய் சேரும் முன் பறந்த ஆர்டர்.. பூரித்து போன ரோஜா! என்ன நடந்தது?ஆந்திர எம்எல்ஏ நடிகை ரோஜா முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தான் வைத்த கோரிக்கை ஒன்று துரிதமாக நிறைவேற்றி உள்ளதாக ரோஜா நன்றி தெரிவித்துள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா நேற்று முதல்நாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலினை ரோஜா சந்தித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு ரோஜா சால்வை வழங்கினார். ஸ்டாலினின் உருவம் பொறிக்கப்பட்ட சால்வையை ரோஜா பரிசாக கொடுத்தார்


ரோஜாவின் நகரி தொகுதி தமிழக எல்லையில் இருப்பதால் அது தொடர்பான கோரிக்கைகளை ரோஜா வைத்து இருக்கிறார். தொழிற்பேட்டைக்கு இணைப்பு சாலை அமைப்பது பற்றி கோரிக்கை விடுத்து உள்ளார். அதேபோல் நகரியில் உள்ள தமிழ் பள்ளிக்கூடங்களில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1,000 தமிழ்ப் பாடப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன என்று ரோஜா இந்த சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் ரோஜா ஆந்திராவிற்கு திரும்பும் முன் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான உத்தரவை துரிதமாக பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எம்எல்ஏ ரோஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் தொகுதியில் மற்றும் சித்துார் மாவட்டத்தில் வசிக்கின்ற தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பாடத்திட்டத்திற்கான 10,000 புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்

உத்தரவு

தங்களை நேற்று காலை 11.00 மணியளவில் சந்தித்து கோரிக்கை விடுத்து, திரும்பி நாங்கள் நகரி வந்து சேர்வதற்குள் எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.'நகரி சட்டமன்ற உறுப்பினர் RK.ரோஜா வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசின் பாடத்திட்டங்களை சித்துார் மாவட்ட பள்ளிகளுக்கு 2021-2022ஆம் ஆண்டின், கல்வி ஆண்டின் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான ஆண்டு தமிழ் பாடநூல்கள் வகுப்புக்கு தலா 1000 பிரதிகள் வீதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு உத்தரவிற்கு நன்றி

சென்னை வட்டார அலுவலக மற்றும் அடையாறு கிடங்கில் இலவசமாக பாடநூல்களை பெற்று கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.' என்ற தங்கள் அரசு உத்தரவு என்னுடைய அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது. மின்னல் வேகம் என்பார்கள், ஆனால் அதை விட வேகமாக தங்கள் உத்தரவு எங்களுக்கு வந்து அடைந்ததை கண்டு நாங்கள் வியந்து போனோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.மின்னல் வேகம்

மின்னல் வேகம் என்பார்கள், ஆனால் அதைவிட அதிகமானதை இனி ஸ்டாலின் வேகம் என்றே குறிப்பிடலாம், என்றே சந்தோஷத்தில் பாராட்ட தோன்றுகிறது. எங்கள் கோரிக்கைகளை ஏற்று சித்துார் மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் மொழி புத்தகத்தை வழங்கிய தங்களுக்கு ஆந்திரா வாழ் தமிழர்கள் சார்பில் இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம், என்று ரோஜா குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,