இந்துமதி அவர்களின் தரையில் இறங்கும் விமானங்கள் : நாவல் என்னுடைய பார்வையில்

 இன்று இந்துமதி அவர்களின் 

தரையில் இறங்கும் விமானங்கள் : நாவல் 

என்னுடைய பார்வையில்


தரையில் இறங்கும் விமானங்கள் : நாவல்

சின்ன வயதில் நான் விரும்பிப் படித்த நாவல். இப்போதும் பிடித்திருக்கிறது..

அனேகமாக என் தலைமுறையினர் அனைவரும் படித்த நாவல். கதையின் நாயகன். விஸ்வத்தின் நிலையில் என்னை பொருத்தி வைத்துப் பார்த்துக் கொள்ள முடிவதுதான் காரணமும் ஒன்று என நினைக்கிறேன் பின்னர் கொஞ்ச நாள் இந்துமதி எழுத்துக்களை தேடி தேடி படிக்கும் வகையில் இந்த நாவல் ஈர்த்தது. அவரின் பிற நாவல்கள் இந்த அளவு இல்லாது போனதாக உணரலாம் இந்த ஒரு நாவல் மூலம் இந்துமதிக்கு கிடைத்த பெயர் மற்ற அனைத்து நாவல்களையும் சேர்த்து கூட கிடைக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். . 

.. .

தரையில் இறங்கும் விமானங்கள் : நாவல் சுருக்கம்

விஸ்வம் ஒரு பட்ட தாரி இளைஞன். கொஞ்சம் அறிவு ஜீவி. தனக்கு பிடித்த மாதிரி இலக்கியம் வாசித்து கொண்டும், எழுதி கொண்டும், வருமானம் இன்றி காலம் கழிக்கிறான். இவனுடைய அண்ணன் பரசு. சராசரி இளைஞன். பரசுவிற்கு திருமணம் நடக்கிறது. ருக்மணி என்ற அழகான, அறிவான மனைவி. 

ருக்மணி தன் கணவரின் தம்பியான விஸ்வத்துடன் இலக்கியம் குறித்து விவாதம் செய்யும் அளவு புத்திசாலி. விஸ்வத்துக்கு ஒரு காதலி உண்டு.இலக்கியம், நண்பர்களுடன் அரட்டை என்று இருக்கும் விஸ்வம் தன் அண்ணன்- அண்ணி மூலம் வாழ்க்கையின் உண்மை நிலை அறிந்து தனக்கு பிடிக்காவிடினும் ஒரு வேலைக்கு செல்வதாக இந்த நாவல் நிறைவடைகிறது.

கீழ் மத்தியதரக் குடும்பங்கள் எல்லாவற்றிலும், அதுவும் பிராமணக் குடும்பங்களில் எழுபதுகளில் இருந்த சூழ்நிலை. பரசு பெண் பார்க்கப் போகும்போது ருக்மணி வீட்டில் இரண்டு அறைதான் என்று வரும். அப்படித்தான் எக்கச்சக்க ஒண்டுக் குடித்தன வீடுகள் இருந்தன. இருநூறு சதுர அடியில் இரண்டு அறை, பொதுவான குளியலறை, கிணறு. இன்ஜெக்ஷன் பாட்டில் தேர், எம்ப்ராய்டரி செய்யும் வயதுப் பெண்கள், ட்ரான்சிஸ்டர், அங்கும் இங்குமாக ஹக்ஸ்லி, சார்த்ரே என்று பேசிக் கொண்டு யு.எஸ்.ஐ.எஸ்., பிரிட்டிஷ் கவுன்சில் என்று போய் வரும் சில இளைஞர்கள், குடும்ப பாரத்தை சுமக்கும் இருபத்து சொச்சம் வயதினர், ரிடையர் ஆன தாத்தாக்கள், என்று தத்ரூபமாகச் சித்தரித்திருத்துள்ளார் எழுத்தாளர். கதையில் பல மனதைத் தொடும் இடங்கள் உண்டு. அவற்றின் சாதாரணத் தன்மையாலேயே, அடிக்கடி நடப்பதால் பழகிவிடுவதாலேயே, அவை மனதைத் தொடுகின்றன.

மேலே படிக்க விரும்பும் பரசுவை டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ளச் சொல்லும் அப்பா, தங்கை தம்பிகள் பாரம் சுமப்பதை முடிந்த வரைக்கும் தள்ளிப் போடப் பார்க்கும் பரசு இரண்டும் குறிப்பாகச் சொல்லக் கூடியவை. பரசுவை அடைய தனக்கு தகுதி இல்லை என்று ருக்மணி மருகுவது சாதாரணம் இல்லை என்றாலும் மனதைத் தொடுகிறது.

இந்த நாவல் எனக்கு பிடிக்க மிக முக்கிய காரணம் அதை வாசித்த வயதும் மற்றும் . விஸ்வம் பாத்திரத்துடன் வாசிக்கும் பழக்கமுள்ள நம்மை போன்ற யாரும் பொறுத்தி பார்க்க முடியும் ! தூரத்தில் செல்லும் மாட்டு வண்டிகளின் சிம்னி வெளிச்சத்தையும் காரை பெயர்ந்த சுவர்களில் தெரியும் உருவங்களையும், ரசிப்பவனாக, ஒரு நல்ல ரசிகனாக விஸ்வம் இருக்கிறான்.

விஸ்வம் தன அண்ணன் பரசுவுடன் உரையாடும் இடம் மிக அற்புதமாக இருக்கும். அதே போலவே விஸ்வம் தன் அண்ணியுடன் உரையாடும் பல இடங்கள் மிக பிரமாதம்!. நாவல் எழுதிய விதத்திலும், இயல்பான உரையாடல்களிலும்தான் வெகுவாக கவர்ந்துள்ளார் இந்துமதி

. விஸ்வம் ஒரு இலக்கிய ரசனை மிகுந்த, சராசரி வேலைகளில் தன்னை தொலைத்துக் கொள்ள விரும்பாத இளைஞனாகவே வருகிறான்.பரசு மணந்துக்கொள்ளும் ருக்மணியை பார்த்து விஸ்வம் அதிர்ச்சி அடைகிறான், இவ்வளவு அழகான பெண் பரசுவுக்கு சரிவருமா என்று ஆதங்க படுகிறான். எனினும் ருக்மணி இந்த கதை நம்முள் இட்டுச் செல்லும் கோலங்களுக்கு அழகான வண்ணம் தீட்டுகிறாள். அவளுக்கும் விஸ்வதிற்கும் இடையே உள்ள நட்பு அழகாய் விரிகிறது, தன்னுடைய அம்மா இட்டுச் சென்ற இடத்தை ருக்மணி எழிதாய் நிரப்பியதாய் நினைகிறான். ருகம்ணியின் இலக்கிய ரசனை, வீணை வாசிப்பு எல்லாம் விஸ்வத்தை இன்னும் சந்தோஷப்படுத்துகிறது, எனினும் ருக்மணியும் பரசுவும் சந்தோஷமாய் இல்லை என்ற என்னமே அவனை வருத்துகிறது.

கவனத்தை ஈர்த்த சில உரையாடல்கள் :

" எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறது நல்ல நினைப்பு தான். ஆனா தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறோம்! தெரிஞ்சுகிட்டவங்க எல்லாம் என்ன பண்றாங்க? நாம பண்ணறதைத்தான் பண்றாங்க. அதுக்காக தெரிஞ்சிக்கிறதே அவசியம் இல்லைன்னு சொல்லலை. தெரியாததாலே தப்பு இல்லைன்னு சொல்ல வர்றேன்"

" நம்ம எல்லாருக்கும் எத்தனையோ ஆசை இருக்கு. எப்படியெல்லாமோ இருக்கணும்னு நினைக்கிறோம். ஆனா எது எதுவோ நடந்து போயிடுது. இதையெல்லாம் பார்க்கிற போது பலமான ஏதோ ஒண்ணு நம்மை வழி நடத்திட்டு போகிறதுன்னு தெரியுது. அது வழியிலே நாம போய்த்தான் ஆகணும்னு புரியுது"

"உங்க புத்திசாலித்தனத்தை நுழைச்சு எல்லாரையும் துருவி பார்க்கிறதை நீங்க விட்டுடனும். எல்லாரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறை குறைகளோட ஏத்துக்கணும். ஏத்துக்குட்டு சந்தோஷமா இருக்க தெரியனும். அவங்களையும் சந்தோஷ படுத்த தெரியணும்""

ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை ஒவ்வொருவர்கள்!!"

எல்லாரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறை குறைகளோட ஏத்துக்கணும். ஏத்துக்குட்டு சந்தோஷமா இருக்க தெரியனும். அவங்களையும் சந்தோஷ படுத்த தெரியணும்"" 

எதார்த்த வாழ்க்கையின் சிக்கல்களை புரிந்து கொள்ள சில நேரங்களில் அதிக அவஹாசம் தேவைப் படுகிறது, அதுவே தரை இறங்க விமானம் எடுத்த் கொள்ளும் நேரம் போன்றது என்று அற்புதமாய் புரிய வைத்திருக்கும் இந்துமதியின் இந்த கதை என்னுள் என்றும் பசுமையாய் இருக்கும்.

, நண்பர்கள் அனைவரையும் இந்த நாவலை. கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு புத்தகம் மூலமாவது ஏராளமான மனிதர்களின் மனங்களை தொட்டார் என்றால் அதுவே போதுமே! அந்த விதத்தில் தரையில் இறங்கும் விமானங்கள் என்றும் மனதில் நிற்கிறது.

’எல்லாரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறை குறைகளோட ஏத்துக்கணும். ஏத்துக்குட்டு சந்தோஷமா இருக்க தெரியனும். அவங்களையும் சந்தோஷ படுத்த தெரியணும்"" 

இப்படி நாம வாழ பழகிக்கொண்டால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்

உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,