காரைக்குடி சிக்கன் கோலா உருண்டை குழம்பு

 


காரைக்குடி சிக்கன் கோலா உருண்டை குழம்பு


நம்மில் பலருக்கு அசைவ உணவுகள் என்றால் கொள்ளை பிரியம். சிக்கன், மட்டனில் பல விதமான சுவையான டிஷ்கள் செய்யலாம். ஆனால் நம்மில் பலரோ அதே குழம்பு, கிரேவி, வறுவல் என அரைத்த மாவையே அரைத்து கொண்டிருப்போம். எனவே இந்த பதிவில் பெரும்பாலனோர்களுக்கு தெரியாத அதே சமயம் சுவையான காரைக்குடி பேமஸ் சிக்கன் கோலா உருண்டை குழம்பு ரெசிபி பற்றி இந்த பதிவில் காணலாம்.


தேவையான பொருட்கள்:

எலும்பு நீக்கிய சிக்கன் – 1/2 கிலோ

பச்சை மிளகாய் – 4

பொட்டுக் கடலை – 1/4 கப்

மிளகாய் தூள் -1

மல்லி தூள் – 1

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

பட்டை,கிராம்பு – 2

இஞ்சி, பூண்டு – சிறிது

தேங்காய் துருவல் – 1/4 கப்

உப்பு – தே.அளவு

செய்முறை:

முதலில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்னர் கோலா உருண்டை பிடிக்க சிக்கன், வெங்காயம், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, உப்பு சேர்த்து சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து சிறு சிறு உருண்டையாக பிடித்து கொள்ளவும்.

இப்போது கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து அதனுடன் நாம் முதலில் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.

கொதி வந்ததும் பிடித்து வைத்த கோலா உருண்டைகளை அதில் போடவும். சிறிது நேரம் கழித்து சிக்கன் கோலா உருண்டை வெந்ததும் கொத்த மல்லி தூவி அடுப்பை அணைக்கவும். தற்போது சூடான காரைக்குடி பேமஸ் சிக்கன் கோலா உருண்டை குழம்பு தயார்.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி