என்னடா வாழ்க்கை

 


என்னடா வாழ்க்கை இது ன்னு தயவு செய்து புலம்பாதீங்க‌.

திடீர்னு நாம் நினைச்சு பார்க்காதப்படி எல்லாம் மாறும்,

மனுஷ வாழ்க்கை ஒரே கோட்டுல பயணிக்காது

ஏறி இறங்கி மெல்ல மேல ஏறும்.


உடைஞ்சி போகக் கூடாது

என்னடா இப்படி ஆயிடுச்சேன்னு 

ஒரு ஓரமா ஒதுங்க கூடாது.

சுருண்டு படுக்க கூடாது.

எல்லாத்துக்கும் ஒரு ஒளி ஒரு வழி உண்டு.

பிரச்சினை தீர்க்கும் வல்லமை நம்மகிட்ட எங்கேயோ ஓரிடத்தில் இருக்கு

அந்த சூட்சுமம் தான் கண்டுபிடிக்கனும்.


எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க மத்தவங்க எல்லாம் ன்னு நினைச்சிடாதீங்க,

அழுதுட்டு வலியை உள் வாங்கிட்டு 

அதிலிருந்து மீண்டுட்டு 

உறுத்தலின்றி இன்னொரு வாழ்வுக்கு இடம்பெயர்ந்த அடிப்பட்ட பறவை அது,

அப்படிதான் சிரிச்சிட்டு இருக்கும்.

ஏன்னா இத்தனை நாள் வரை கூண்டுல இருந்த வலியை நினைச்சு நினைச்சு ஏங்கின பறவை அது.


அது போல தான் இந்த உலகம்.

சிரிச்சிட்டே இருக்க விடாது

அழ வைக்கும்

கதற வைக்கும்

துரோகம் வலி எல்லாம் காட்டும்,

அதிலியே ஊறவிடாது

அதுவே நம்மை இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும்.


பிடிக்காததை திணிச்சு அப்புறம் நமக்கே பிடிக்க வைச்சு மேஜிக் காட்டும்.

நல்லதொரு அழகான நினைவுகளை நாமே பார்க்காத வண்ணங்களால் அமைத்து செதுக்கி ஏற்படுத்திக் கொடுக்கும்.

எதுவும் முடிஞ்சிடலை இங்கே,

எல்லாம் எல்லோரும் கிடைக்கும்.

அதுவரை அமைதியா இருங்க

ஏன்னா நீங்க உயிரோடு இருக்கீங்க

இன்னும் சாகலை..

சிரிச்சிட்டே இருங்க எப்போதும்.


#ஸ்ரீநி

Comments

SRI said…
������ tq

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,